‘நேசமணி’யை விடமாட்டாங்க போலிருக்கே... ‘காண்டிராக்டர் நேசமணி’ என்ற பெயரில் சினிமா வரப்போகுதாம்!

Published : Jun 01, 2019, 07:12 AM IST
‘நேசமணி’யை விடமாட்டாங்க போலிருக்கே... ‘காண்டிராக்டர் நேசமணி’ என்ற பெயரில் சினிமா வரப்போகுதாம்!

சுருக்கம்

சமூக ஊடங்களில் திரும்பும்  திசையெல்லாம் ‘நேசமணி’ என்ற பெயரே நிறைந்திருந்ததால், சமூக ஊடகங்களில் அந்த வார்த்தை ஹிட் அடித்தது. ட்விட்டர் டிரெண்டிங்கில் இந்திய அளவில் முதலிடத்தையும் உலக அளவில் இரண்டாவது இடத்தையும் ‘நேசமணி’ என்ற வார்த்தை முந்தியது. 

 சமூக ஊடங்களில் கடந்த இரண்டு நாட்களாக வைரலான 'காண்டிராக்டர் நேசமணி’ என்ற பெயரில் சினிமா எடுக்க அந்தப் பெயர் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 ‘பிரே ஃபார் நேசமணி’, ‘காண்டிராக்டர் நேசமணி’ ஆகிய வார்த்தைகள் சமூக ஊடங்களில் கடந்த இரண்டு நாட்களாக வைரலானது. ’ஃபிரண்ட்ஸ்’ படத்தில் வடிவேல் நடித்த ‘காண்டிராக்டர் நேசமணி’ என்ற கதாபாத்திரத்துக்கு அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளதாகவும், அதற்காக ‘பிரே ஃபார் நேசமணி’ என்ற வார்த்தையைப் போட்டு தமிழர்கள் சமூக ஊடகங்களில் அதகளப்படுத்திவிட்டார்கள்.
சமூக ஊடங்களில் திரும்பும்  திசையெல்லாம் ‘நேசமணி’ என்ற பெயரே நிறைந்திருந்ததால், சமூக ஊடகங்களில் அந்த வார்த்தை ஹிட் அடித்தது. ட்விட்டர் டிரெண்டிங்கில் இந்திய அளவில் முதலிடத்தையும் உலக அளவில் இரண்டாவது இடத்தையும் ‘நேசமணி’ என்ற வார்த்தை முந்தியது. மோடி பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்ற நிகழ்வைக்கூட ‘நேசமணி’ பின்னுக்குத் தள்ளினார். அந்த அளவுக்கு நம்மவர்கள் ‘நேசமணியை’ டிரெண்டிங் செய்தார்கள்.
இந்நிலையில் ‘காண்டிராக்டர் நேசமணி’ என்ற வார்த்தையைப் படத் தலைப்பாக தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. ஏஸ் மீடியா என்ற நிறுவனம் இந்தப் பெயரை பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. சமூக ஊடங்கள் மூலம் பெரும் பப்ளிசிட்டி பெற்ற ‘காண்டிராக்டர் நேசமணி’யை என்றபெயரில் படம் தயாரிக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பெரிய ஐஸ்வர்யா ராய்னு நெனப்பு... பேபினு சொன்ன வாயை உடைச்சிருவேன் - பாரு உடன் சண்டைபோட்ட கம்ருதீன்
ஷாருக்கானுக்கு இப்படி ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறதா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!