நடிகர் ஹரீஷ் கல்யாணை நேரில் வரவழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்!... எதற்காகத் தெரியுமா?

Published : Nov 26, 2019, 10:54 PM IST
நடிகர் ஹரீஷ் கல்யாணை நேரில் வரவழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்!... எதற்காகத் தெரியுமா?

சுருக்கம்

தமிழ் திரையுலகின் ஓர் அடையாளமாக, இன்றைக்கும் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் புதிய படங்களை பார்ப்பதையும், அந்தப் படங்கள் பிடித்திருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட இயக்குநர்களையும், நடிகர்களையும் நேரில் அழைத்து பாராட்டுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.    

அப்படி இல்லையெனில், தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திலாவது, சம்பந்தப்பட்ட படக்குழுவினருக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துவிடுவார். 

அந்த அளவுக்கு, திரையுலகின் நடவடிக்கைகளையும், புதிய படைப்பாளிகளின் வருகையையும் ஆழ்ந்து கவனித்து வரும் ரஜினிகாந்தை, விரைவில் வெளியாகவிருக்கும் ஹரீஷ் கல்யாணின் 'தனுசு ராசி நேயர்களே' படத்தின் டீசர் வெகுவாக கவர்ந்துள்ளது. 


குடும்பத்துடன் அனைவரும் கலகலப்பாக ரசித்தும் பார்க்கும்படி ஜனரஞ்சகப்படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார். இவர் வேறுயாருமல்ல, பிரபல நடிகரும், இயக்குநருமான சந்தான பாரதியின் மகன்தான். டிசம்பர் 6ம் தேதி ரிலீசாகவுள்ள 'தனுசு ராசி நேயர்களே' படத்தின் டீசர், சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடன் நல்ல வரவேற்பை பெற்றது.


இந்த நிலையில், இந்தப் படத்தின் ஹீரோ ஹரீஷ் கல்யாண், இயக்குநர் சஞ்சய் பாரதி ஆகியோரை சூப்பர் ரஜினிகாந்த் நேரில்வரவழைத்து பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பு, சூப்பர் ஸ்டாரின் போயஸ் கார்டன்  இல்லத்தில் நடைபெற்றுள்ளது. 

அப்போது, தனுசு ராசி நேயர்களே படத்தின் டீசருக்கு ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். அத்துடன், இயக்குநராக அறிமுகமாகும் சந்தானபாரதியின் மகனை ஆசிர்வதித்து படம் வெற்றியடைய வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.  

சூப்பர் ஸ்டாருடனான சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ரஜினிகாந்திடமிருந்து கிடைத்துள்ள பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களால் 'தனுசு ராசி நேயர்களே' படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?