தீயா வேலை செய்யும் லோகேஷ் கனராஜ்! 'தளபதி-64' ரிலீசுக்கு நாள் குறிப்பு...! ஷுட்டிங் ப்ளான் என்னன்னு தெரியுமா?

By Selvanayagam PFirst Published Nov 26, 2019, 8:50 PM IST
Highlights

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் 'தளபதி-64'. இந்தப் படத்தில், வில்லனாக 'மக்கள் செல்வன்' விஜய்சேதுபதி நடிக்கிறார். 'மாநகரம்', 'கைதி' படங்களைப் போன்றே, இந்தப் படத்தையும் வித்தியாசமான கதைக்களத்துடன் படைத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். 
 

'தளபதி-64' படத்தில் கல்லூரி பேராசிரியராக விஜய் நடிப்பதாகக் கூறப்படுகிறது.இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்துமுடிந்துவிட்ட நிலையில், 2-வது கட்ட படப்பிடிப்பு டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதில், நடன இயக்குநர் தினேஷின் நடன வடிமைப்பில், 150க்கும் மேற்பட்ட டான்சர்களுடன் விஜய் ஆடிய மாஸான பாடல் படமாக்கப்பட்டது. அத்துடன், ஹீரோயின் மாளவிகா மோகனன் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டன. 

இதனையடுத்து, விஜய் தொடர்பான காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், 'தளபதி-64' படத்தின் ரிலீஸ் தேதி, ஷுட்டிங் ப்ளான் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அது என்னன்னா? இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வரும் 2020 ஏப்ரல் 9-ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம். 

அதற்கு ஏற்றாற்போல், படத்தின் ஷுட்டிங் முழுவதையும், வரும் ஃபிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளாராம். இதனையடுத்து, உடனடியாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் ஆரம்பிக்க உள்ளாராம்.

வழக்கமாக மாஸ் ஹீரோ படங்கள் என்றால், அந்தப் படத்தின் இயக்குநர்கள் ஒவ்வொரு சீனையும் பிரம்மாண்டமாக மாஸாக எடுக்கிறேன் எனக்கூறி நாட்களை கடத்துவதுதான் வாடிக்கை. 

ஆனால், அவர்களிடமிருந்து முற்றிலும் வித்தியாசமானவராக தென்படும் லோகேஷ் கனகராஜ், தன் கதைக்கு தேவைப்படும் காட்சிகளை ஏற்கெனவே திட்டமிட்டு படுவேகமாக கேமிராவில் சுட்டுத்தள்ளி வருகிறாராம். 

இப்படி, தீயா வேலை செய்யும் லோகேஷ் கனகராஜின் வேகத்தையும், வொர்க்கிங் ஸ்டைலையும் கண்டு விஜய்யே மிரண்டு போயுள்ளாராம். இதிலிருந்து, 'தளபதி-64' படம் திட்டமிட்டபடி கோடை விருந்தாக திரைக்கு வரும் என்பது மட்டும் உறுதியாகிறது.

click me!