
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பல வருடங்களுக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'தர்பார்'.
இந்தப் படத்தை லைக்கா புரடக்ஷன் தயாரித்து வருகிறது. இப்படம் குறித்து அவ்வப்போது ஏதேனும் சில தகவல்கள் வெளியாகி, ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் 'சும்மா கிழி' பாடலின் சிங்கிள், நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்தப்படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, நிவேதா தாமஸ், பிரதிக் பாப்பர், நவாப் ஷா, பேபி மானஸ்வி கொட்டாச்சி, போன்ற பலர் நடித்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அறிமுகப் பாடலாக இருக்கும் 'சும்மா கிழி' பாடலை, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். விவேக் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த தகவலை தலைவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.