மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு பிடித்த அந்த 4 பேர்... பேரை கேட்டால் ஆடிப்போவீங்க, ஆடி... யார் தெரியுமா?

Published : Nov 26, 2019, 06:03 PM IST
மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு பிடித்த அந்த 4 பேர்... பேரை கேட்டால் ஆடிப்போவீங்க, ஆடி... யார் தெரியுமா?

சுருக்கம்

 சினிமா குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் சேதுபதி, தனக்கு பிடித்த 4 நடிகர்கள் குறித்து தெரிவித்துள்ளார். 

ஆரம்பத்தில் சின்ன, சின்ன வேடங்களில் நடித்து, அதன் பின்னர் கதாநாயகனாக அவதாரம் எடுத்து இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி ஹீரோவாக வளர்ந்து நிற்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தனது குணச்சித்திர நடிப்பால் தமிழக ரசிகர்களை கவர்ந்த விஜய் சேதுபதி, சக ஹீரோக்களுடன் பேதம் பார்க்காமல் வில்லனாக கூட இறங்கி கெத்து காட்டுவதில் வல்லவர். அப்படி விஜய் சேதுபதி நெகட்டிவ் கேரக்டரில் நடித்த பேட்ட, விக்ரம் வேதா ஆகிய திரைப்படங்கள் உச்சம் தொட்டன. இதையடுத்து தற்போது விஜய்க்கு வில்லனாக தளபதி 64 படத்தில் நடிக்க உள்ளார். 

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் மாஸ் காட்டி வரும் விஜய் சேதுபதி. இந்தியில் முன்னணி நடிகர் அமீர்கான் உடன் நடிக்க உள்ளார். அண்மையில் பாலிவுட், டோலிவு, கோலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. சினிமா குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் சேதுபதி, தனக்கு பிடித்த 4 நடிகர்கள் குறித்து தெரிவித்துள்ளார். 

சிவாஜி கணேசன் அனைத்து வேடங்களிலும் சிறப்பாக நடிக்க கூடியவர், கமல் ஹாசன் திறமையான நடிகர், மோகன் லால் இயல்பாக நடிக்க கூடியவர், எம்.ஜி.ஆர். கதை தேர்வும் நடிப்பும் பிடிக்கும் என பளீச்சென பதிலளித்துள்ளார். பாலிவுட் பிரபலங்கள் நிறைந்திருந்த அந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கொடுத்த மாஸ் பேட்டி தமிழக ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?