ஹீரோ' சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிக்கிறாரா 'பிக்பாஸ்' கவின்? - அடுத்தடுத்து வெளியான புதிய புகைப்படங்களால் ரசிகர்கள் உற்சாகம்!

Published : Nov 26, 2019, 09:37 PM IST
ஹீரோ' சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிக்கிறாரா 'பிக்பாஸ்' கவின்? - அடுத்தடுத்து வெளியான புதிய புகைப்படங்களால் ரசிகர்கள் உற்சாகம்!

சுருக்கம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்-3' நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் கவின். இந்நிகழ்ச்சியில், போது, நட்புக்கு துணை நின்றது, இலங்கை பெண் லாஸ்லியாவுடன் இணைந்து காதலுக்கு மரியாதை செய்தது என கவினின் ஒவ்வொரு செயல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.   

இதனால், அவருக்கு ஆதரவாக, சமூக வலைதளங்களில் பல ஆர்மிக்கள் உருவாகி, இன்றளவும் ஆக்டிவ்வாக இயங்கி வருகின்றன. அதற்கு காரணம், கவின் என்ற அந்த மந்திரச் சொல்தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து கிட்டத்தட்ட 2 மாதங்கள் ஆகவுள்ள நிலையிலும், கவினை தொடர்ந்து தீவிரமாக ஃபாலோ செய்யும் ரசிகர்கள், அவர் பற்றிய செய்தியோ அல்லது புகைப்படங்களோ வெளியானாலோ அதை கொண்டாடி தீர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

அப்படிப்பட்ட, ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக, 'ஹீரோ' சிவகார்த்திகேயனுடன் கவின் இருக்கும் செல்ஃபி புகைப்படம் ஒன்று, தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. 

இதனை ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்க, சிவகார்த்திகேயன், 'கனா' புகழ் தர்ஷன் ஆகியோருடன் கவின் இருக்கும் மற்றொரு புகைப்படமும் அடுத்த சில நிமிடங்களிலேயே வெளியாகி இணையத்தையே அதிரவைத்து வருகிறது. 

இந்தப் புகைப்படத்தை, நடிகர் கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார். கவினின் புதிய படத்தின் அப்டேட்டுக்காக தவமாய் தவம் கிடக்கும் அவரது ரசிகர்களுக்கு, அடுத்தடுத்து சிவகார்திகேயனுடன் இருக்கும் கவினின் புகைப்படங்கள் வெளியாகியிருப்பது டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது. 

இந்தப் புகைப்படங்களைப் பார்த்து உற்சாகமடைந்திருக்கும் ரசிகர்கள் பலர், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கவின் நடிப்பதாக அறிவிப்பு வந்தால் எப்படி இருக்கும் என தங்களது எதிர்பார்ப்புகளை கமெண்ட்களாக தெறிக்கவிட்டு வருகின்றனர். 


பொதுவாக எந்தவொரு கமிட்மெண்ட் பற்றியும் முன்கூட்டியே சொல்லாமல், உறுதியான பிறகே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது கவினின் வழக்கம். அதேநேரம், சூசகமாக தெரிவிப்பதும் அவரது ஸ்டைல்தான். இதனாலேயே, அடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில்தான் நடிக்கப்போகிறேன் என்பதை கவின் சூசகமாக சொல்கிறாரோ என அவரை தீவிரமாக ஃபாலோ செய்யும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?