Rajinikanth about Tiruvannamalai Landslide : திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலியானது பற்றிய கேள்விக்கு எப்போ என கேட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளார் ரஜினிகாந்த்.
புரட்டிப்போட்ட ஃபெஞ்சல் புயல்
தமிழகத்தின் வட மாவட்டங்களை அண்மையில் உருவான ஃபெங்கல் புயல் புரட்டிப்போட்டது. முதலில் சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பெஞ்சல் புயலால் அதிகனமழை பெய்தது. இதற்கு அடுத்தபடியாக விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி நோக்கி நகர்ந்து சென்ற அந்த புயல் காரணமாக அம்மாவட்டங்களில் வரலாறு காணாத மழைப்பொழிவு இருந்தது. குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வெள்ளத்தில் மூழ்கின.
திருவண்ணாமலையில் நிலச்சரிவு
இந்த பெருமழையால், திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 7 பேர் பலியான சம்பவமும் அரங்கேறியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிவாரண நிதி வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு நடிகர்கள் சிவகார்த்திகேயன், கார்த்தி ஆகியோர் நிவாரண நிதியும் வழங்கி இருக்கின்றனர். சிவகார்த்திகேயன் 10 லட்சமும், கார்த்தி 15 லட்சமும் நிவாரண நிதியாக வழங்கி உள்ளார்.
இதையும் படியுங்கள்... எத்தனை கோடி கொடுத்தாலும் விளம்பரத்தில் நடிக்க மறுக்கும் ரஜினிகாந்த்; காரணம் என்ன?
ரஜினிகாந்த் பதில்
இந்த நிலையில், ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் கூலி படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திடம் திருவண்ணாமலையில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலியானது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதைக் கேட்டு ஷாக் ஆன ரஜினி, எப்போ என கேட்டது மட்டுமின்றி, அப்படி ஒரு சம்பவம் நடந்தது தனக்கு தெரியாதது போல் ‘ஓ மை காட்’ என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.
திருவண்ணாமலையில் நிலச்சரிவா... எப்போ? - ரஜினிகாந்த் pic.twitter.com/IEj2P9Mhbr
— Asianetnews Tamil (@AsianetNewsTM)விமர்சிக்கப்படும் ரஜினி
ரஜினிகாந்தின் இந்த பதில் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. நாட்டு நடப்பே தெரியாமல் இருக்கிறாரா ரஜினி என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருவதோடு, அவர் வேறு ஒரு உலகத்தில் வாழ்கிறார் போல என சாடியும் வருகின்றனர். ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தொடங்கி உள்ளது. அதில் கலந்துகொள்ள தான் ரஜினி இன்று சென்றிருக்கிறார்.
இதையும் படியுங்கள்... 10 லட்சம் சம்பள பாக்கி; ஆனால் அதில் பைசா வாங்காமல் நடித்துக்கொடுத்த ரஜினி - ஏன் தெரியுமா?