70 சதவீதம் தியேட்டர்களை வளைத்த விஸ்வாசம்! பேட்ட படத்துக்கு காத்திருப்பது டப்பா தியேட்டர்கள்தானாம்!

By sathish kFirst Published Dec 2, 2018, 12:36 PM IST
Highlights

ரஜினியின் பேட்ட படமும் ஒரே சமயத்தில் ரிலீஸாவது தமிழ் சினிமாவுக்கே பிடிக்கவில்லை. ஆனால், சத்யஜோதி ஃபிலிம்ஸ் தனது முடிவில் கறாராக இருக்கிறது. ரஜினி படம் ரிலீஸானாலும் நமது படத்துக்கான கூட்டம் வந்துகொண்டேதான் இருக்கும் என நம்பிக்கையில் இருக்கிறதாம் சத்யஜோதி ஃபிலிம்ஸ்.

நாலு வருஷம் கஷ்டப்பட்ட படம் 2.0 போட்ட காசை எடுக்க தியேட்டரில் தினரிக் கொண்டிருக்கும் நேரத்தில், ரஜினி தலையில் இடி விழும் ஒரு செய்தியை பட்டது. அது வேற ஒண்ணுமில்லை சொன்ன தேதியில் விசுவாசம் ரிலீஸ், பொங்கலுக்கு வெளியாவதாக படப்பிடிப்பு தொடங்கியபோதே சொன்னது தான்.  ஆறு மாசத்துக்கு முன்பாக பட ஷூட் தொடங்கி இப்போதே வெளியிட முந்திக்கொண்டு வந்தால்? என தயாரிப்பு தரப்பை யோசிக்க வைத்தது.

எது எப்படியோ ‘விஸ்வாசம்’ ரிலீஸாக வெறித்தனமாக உழைத்துக் கொண்டிருக்கிறது இயக்குநர் சிறுத்தை சிவாவின் கேங். அடுத்தடுத்து படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் டிராக், ஆல்பம் வெளியீடு என்று வரிசையாக வைப்ரேஷன்களை கிளப்பிக் கொண்டு போயி கடைசியாக பொங்கலில் படத்தை ரிலீஸ் செய்து, பட்டையை கிளப்புவது என்று முடிவு செய்திருக்கிறார்கள். பிளான் படி எல்லாம் பக்காவாக போய்க் கொண்டிருக்கிறது. 

தியேட்டர்கள் உரிமையாளர்களை பொறுத்தவரை ’ஒரே சமயத்தில் ரெண்டு மாஸ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸா? தவிர்க்கலாமே! விவேகம் தோல்வியடைந்ததால் வருத்தத்தில் இருக்கும் அஜித் மற்றும் தயாரிப்பு தரப்பும் வருமானம் பார்க்கட்டுமே! மேலும் டிசம்பர் 29-ல் தான் ரஜினியின் பிரம்மாண்ட படமான 2.0 ரிலீஸாகிறது அதற்கடுத்த சில வாரங்களிலேயே ரஜினியின் அடுத்த படமா?  யோசியுங்கள்.’ என்று சினிமா உலகின் முக்கியஸ்தர்கள் கருத்து தெரிவித்தார்கள். 

ஆனால் பேட்ட படத்தின் தயாரிப்பாளர்  கலாநிதி மாறன் என்பதால், வழக்கமான பிடிவாத தன்மையுடன் விட்டுக் கொடுக்காமல் இருந்தார்கள். இந்த விவகாரம் அஜித்தின் காதுகளுக்கு போக, ‘யாரா இருந்தால் என்ன? மோதிப் பார்ப்போம்! எத்தனை படம் வந்தாலும், நல்லா இருக்கிற படத்தைத்தான் ரசிகன் கொண்டாடுவான். நம்ம படம் நல்லா இருந்தால் அந்த வெற்றியை யாரும் தடுக்க முடியாது.’ என்று தன் சினிமா பாணியிலேயே தயாரிப்பாளருக்கு பதில் சொல்லிவிட்டார். 

அஜித்தே சொன்ன பின்னே என்ன, விடுவார்களா! படத்தை தமிழகத்தில் விநியோகிக்கும் பொறுப்பை கே.ஜே.ஆர்.ராஜேஷிடம் கொடுத்தார்கள். அவர் மளமளவென சென்னை, செங்கல்பட்டு மல்டி ஃபிளக்ஸ் தியேட்டர்களை தவிர்த்து தமிழகம் முழுவதும் இருக்கிற சுமார் 65 முதல் 70 சதவீதம் தியேட்டர்களை விஸ்வாசம் ரிலீஸுக்காக புக் பண்ணிவிட்டார். மீதியிருக்கும் தியேட்டர்களில் பெரும்பாலானவை டப்பா தியேட்டர்கள்தானாம். 

இவற்றில் போய் ரஜினிகாந்தின், அதுவும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும், மல்டி ஸ்டார்ஸ் படத்தை ரிலீஸ் பண்ணுவார்களா? என்பதே இப்போதைய கேள்வி.  2.0வின் ஓப்பனிங் சக்ஸஸ் மகிழ்ச்சியில் இருக்கும் ரஜினியின் காதுகளுக்கு இந்த தகவல் சென்றது மனிதர் அப்செட் ஆகிவிட்டாராம். அஜித் தரப்பின் இந்த அதிரடியை எதிர்பாராத கலாநிதி மாறன் தரப்பு, இப்போது சுதாரித்துவிட்டு அடுத்தடுத்த மூவ்களில் இறங்கியுள்ளது. 

click me!