
பெயருக்கு ஏற்றார்போல் மொத்தம் ஒன்பது கார்கள் வாங்கும் முடிவில் இருக்கிறார் போல. தன்னிடம் ஏற்கனவே நான்கு கார்கள் உள்ள நிலையில் ஐந்தாவதாக, நேற்று முன் தினம் புதிதாக ஜாகுவார் கார் ஒன்றை வாங்கியுள்ளார் நடிகை நயன் தாரா.
ஆனால் இந்த புதிய காரை ஓட்டுவதற்கு அவர் டிரைவர் யாரையும் நியமிக்கப்போவதில்லை என்றும் அவரது தற்காலக் காதலனும் வருங்கால கணவனும் ஆகிய விக்னேஷ் சிவன் மட்டுமே அக்காரின் டிரைவராக இருப்பார் என்று நயனே மொத்தப் பற்களும் தெரிய சிரித்தபடி சொன்னதாக அவரது காஷ்ட்யூம் மேக் அப் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சூர்யாவை வைத்து ‘தானா சேர்ந்த கூட்டம்’ இயக்கிய பிறகு விக்னேஷ் சிவன் புதைய படங்கள் எதுவும் இயக்க கமிட் ஆகவில்லை. முழுநேர ஹவுஸ் ஒயிஃப் போல் நயன் தாராவுக்கு முழுநேர காப்பாளராக வலம் வருகிறார். உன் கூடவே நான் இருந்து செய்யும் காரியங்கள் பயங்கரமாக இருக்கும் என்பதைப்போல் நயனுக்கு கதை கேட்பது, கால்ஷீட் பிரித்து தருவது, கால் பிடித்து விடுவது வரை சகலமும் விக்னேஷ் என்று ஆகிவிட்டதாம்.
இப்படி 24 மணிநேர ஆம்புலன்ஸ் சர்வீஸ் போல விக்னேஷ் சிவன் ஆகிவருவதால் நயனுடைய டிரைவர்கள் உட்பட ஒவ்வொருவராக வேலை வாய்ப்புகள் குறைந்து விரக்தியில் இருக்கிறார்களாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.