
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான படம் அண்ணாத்த. சிவா இயக்கியிருந்த இப்படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இருப்பினும் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் அடுத்த பட தேர்வில் மிகவும் கவனமாக இருக்கிறாராம் ரஜினி.
கடந்த சில ஆண்டுகளாகவே இளம் இயக்குனர்களின் படங்களில் அதிகளவில் நடித்து வந்த ரஜினி, அடுத்ததாக நடிக்க உள்ள படத்தை இளம் இயக்குனர்களுக்கே வழங்குவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
அந்த பட்டியலில் தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோரின் பெயர்கள் இருந்தன. அண்மையில் பாண்டிராஜ் பெயரும் ரஜினியின் அடுத்த பட லிஸ்டில் இருந்தது.
இந்நிலையில், அண்ணாத்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத காரணத்தால், தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை தன்னுடைய பேவரைட் இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமாருக்கு வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கான கதை விவாத பணியில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், தனது சகாக்களுடன் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் முத்து, படையப்பா போன்ற படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.