
சின்னத்திரையில் ஒளிபரப்பான பகல் நிலவி சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமான சிவானி, இதையடுத்து இரட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் ஹீரோயினாக நடித்து புகழ் பெற்றார். பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார்.
இந்நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழ் வெளிச்சம் காரணமாக, அவருக்கு பட வாய்ப்பும் கிடைத்துள்ளது. அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் விக்ரம் படத்தில் சிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் மூலம் அவர் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி உள்ளார்.
இவ்வாறு நடிப்பில் பிசியாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இயங்கி வருகிறார் சிவானி. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இவரை 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். ரசிகர்களை கவரும் விதமாக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் சிவானி.
அதன்படி சமீபத்தில் கையில் வோட்காவுடன் அவர் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. பதறவேண்டாம்.... வோட்கா என்பது அவர் புதிதாக வாங்கி உள்ள நாயின் பெயர். அந்த நாயை கையில் பிடித்தவாறு இருக்கும் புகைப்படத்தை தான் சிவானி வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.