Puneeth Rajkumar : கர்நாடக காடுகளில் உலா வந்த புனித்ராஜ்குமார் ; வெளியானது அப்புவின் வைல்ட் லைஃப் !!

By Kanmani PFirst Published Dec 6, 2021, 2:08 PM IST
Highlights

Puneeth Rajkumar :  புனித் ராஜ்குமாரின் ஆவணப்படத்தின் டீஸர் மறைந்த நடிகர் புனித் ராஜின் தயார் பர்வதம்மா ராஜ்குமாரின் பிறந்தநாளை ஒட்டி இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவ ர்  புனித் ராஜ்குமார். ரசிகர்களால்  பவர்ஸ்டார் என்று  செல்லமாக அழைக்கப்பட்ட புனித் பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகங்களில் பணிபுரிந்து வந்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இவரது நடிப்பில் கடைசியாக  வெளிவந்த ‘யுவரத்னா’  மிகப்பெரிய அளவில் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதைத்தொடர்ந்து ‘ஜேம்ஸ்’, ‘த்வித்வா’ ஆகிய படங்களில் புனித் நடித்து வந்தார்.

சினிமாவில் மட்டும் நாயகனாக நடித்து விட்டு தான் சம்பாதித்த கோடிகளில் ஒரு ரூபாய் செலவிடவும் தயங்கும் முன்னணி நடிகர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்துள்ளார் புனித தனது வாழ்நாள் சம்பாத்தியத்தில் பெரும் பகுதியை இலவச கல்வி, முதியோர் இல்லம், ஏழைகளுக்கு உதவி என தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டுள்ளார். சத்தமே இல்லாமல் இவர் செய்த பல நல்ல காரியங்கள் புனித்தின் மரணத்திற்கு பின்னரே  வெளி உலகிற்கு தெரியவந்தது என்றே சொல்லலாம்.

உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவரின் ஸ்டண்ட் போன்ற உடற்பயிற்சி வீடியோக்கள் சமூக அக் வலைதளத்தில் வைரலாகி வந்தன. அவ்வாறு கடந்த மாதம் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த புனித்திற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த அக்டொபர் 29-ம் தேதி புனித் காலமானார். அவரை மருத்துவமனையில் சேர்த்த சேதி அறிந்த ரசிகர்கள் மருத்துவமனையை திக்குமுக்காட செய்திருந்தனர்.  ஒரு மாநிலமே கலங்கும் அளவிற்கு புனித ஆத்மாவாக வாழ்ந்து மறைந்த புனித் ராஜ்குமாருக்கு கர்நாடகாவின் உயரிய விருதான கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே புனித் கர்நாடக காடுகளை பாதுகாக்கவும் விதத்தில் ஆவணப்படம் ஒன்றில் நடித்திருந்தார்.  பிரபல வனவிலங்கு திரைப்பட தயாரிப்பாளர் அமோகவர்ஷா ஜே.எஸ் உடன் புனித் இணைந்து கர்நாடக காடுகளின் வழியாக எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படம் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்தது.. மேலும் இந்த ஆவணப் படத்திற்கு "சந்தனக் கோயில் என்று பொருள்படும் கந்தாட கு"டி என்று பெயரிடப்பட்டுள்ளது. இது மறைந்த நடிப்பு ஜாம்பவான் டாக்டர் ராஜ்குமாரின் 1973 ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் படத்தின் தலைப்பு ஆகும், இது கர்நாடகாவின் காடுகளின் புனிதம் மற்றும் செல்வத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.

இந்த ஆவணப்படத்தின் டீஸர் மறைந்த நடிகர் புனித் ராஜின் தயார் பர்வதம்மா ராஜ்குமாரின் பிறந்தநாளை ஒட்டி இன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

click me!