எத்தனை பேர் படத்தை நீ கிழிச்சிருப்ப... ப்ளூசட்டை மாறனின் அண்டி இண்டியன் பொதுவெளி விமர்சனம்..!

By Thiraviaraj RMFirst Published Dec 6, 2021, 1:34 PM IST
Highlights

உனக்கு நீயே படத்துல பாட கட்டிட்ட. உன் படத்துக்கு எவன் எவன் பாட கட்ட போறானோ..? 

இனிமே ப்ளூ சட்டை மாறன் ஹோட்டலில் சேர்ந்து பூண்டு உரிக்க மட்டுமே செய்தால் அவர்  மானத்தோடு வாழலாம். இந்த மாதிரி யாராவது பாயிண்ட் அவுட் பண்ணி சொன்னால் கூட ப்ளூசட்டை மாதிரி ஆட்கள் திருந்தவே மாட்டார்கள். உனக்கு நீயே படத்துல பாட கட்டிட்ட. உன் படத்துக்கு எவன் எவன் பாட கட்ட போறானோ..? என கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு பதிலளித்துள்ள பளூசட்டை மாறன், ‘’சீக்கிரம் கருமாதிக்கு வந்து சேருங்க ராஜசேகர் (பாஜக). உங்க ப்ரமோஷன்தான் முக்கியம். ப்ளீஸ்’’ எனத் தெரிவித்துள்ளார், 

‘’ எத்தனை பேர் படத்த நீ கிழிச்சிருப்ப... இப்ப உன் படத்த கிழிக்கும்போது மட்டும் வலிக்குதா’’ என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள ப்ளூசட்டை மாறன், ‘’காலையில் போணி செய்து வியாபாரத்தை துவக்கிய திரு. ரஞ்சித் அவர்களுக்கு மிக்க நன்றி’’ எனத் தெரிவித்துள்ளார்.  இதெல்லாம் ஒரு படமா? சத்தியமா ஓடாது என்று பாராட்டிக்கொண்டிருக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு கோடான கோடி நன்றி. வெரைட்டி மீம்ஸ் போட்டு கிழித்து தொங்க போடவும். ப்ரமோஷனுக்கு உதவியாக இருக்கும்.     

காலை நாஸ்டா முடிந்ததும்.. கமன்ட் செக்சனுக்கு உடனே வருகை தரவும். வாங்கோண்ணா.. வாங்கோ என பலரையும் பளூ சட்டை மாறன் அழைத்துள்ளார். தமிழ் சினிமாவில், தரத்தை நிர்ணயம் செய்ய அதன் பட்ஜெட் - மார்க்கெட் - ஸ்டார் காஸ்ட் போன்ற காரணிகள் குறுக்கிட்டுவிடக் கூடும். ஆனால், படத்தின் நோக்கத்தை நிலைநிறுத்திவிட இருவரால் முடியும். முதலாமவர் படத்தின் இயக்குநர். அடுத்து, அதன் தயாரிப்பாளர்.

அந்த வகையில் ஆன்டி இண்டியன் திரைப்படம் அதன் நோக்கத்தில் உயர்ந்து நிற்பதைக் காண முடிந்தது! இப்ராஹிம் - பாஷா - சரோஜா என்னும் லூர்து மேரி ஆகிய மூன்று கடலோர எளிய அப்பாவிகளையும், வாழும்போது உறுத்தி ஒதுக்காத அவர்களின் மதங்கள்… பாஷாவின் பாடியை ஏற்றி வரும் ஆம்புலன்ஸின் பின்னால் பரபரப்பாக ஓடி வந்த அவலக் கூத்துக்கள் அனைத்தையும்… கவலையோடும் - கனத்த நையாண்டியோடும் படம் நெடுகச் சொல்லிப் போகிறார் புதுமுக இயக்குநர் இளமாறன்.

திரைப்படத்தில் மூன்று மதங்களின் பிடிவாதங்களும் தீர அலசப்படுகிறது என்றாலும், எங்குமே சார்பு நிலை எடுக்காமல், யாரையும் முகம் சுளிக்க வைக்காமல் சமன்படுத்திப் போன விதத்தில் சமூக அக்கறையும் முதிர்ச்சியும் கொண்டு மிளிர்கிறது ஆன்டி இண்டியன். சுருங்க சொன்னால், காலர் பட்டன் போட்ட கண்ணியத்தோடு காட்சி அளிக்கிறது ப்ளூ சட்டை!
 

click me!