உ.பி.யில் தலைவர் அலப்பறை! முதல்வர், ஆளுநருடன் சந்திப்பு... நாளை அயோத்தி ராமர் கோயிலில் வழிபாடு!

By SG Balan  |  First Published Aug 19, 2023, 5:05 PM IST

ரஜினிகாந்த் மாலையில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்க இருக்கிறார். நாளை அயோத்தி ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய இருக்கிறார்.


இமயமலை பயணம் மேற்கொண்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் அந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு வட மாநிலங்களில் பல அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார். அடுத்த திட்டமாக அவர் நாளை அயோத்திக்கும் செல்ல இருக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு 'ஜெயிலர்' மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் முத்துவேல் பாண்டியனாக அதிரடியான தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் வெளியானது முதல் ரசிர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்றுவருகிறது.

Tap to resize

Latest Videos

இவரும் ரஜினி ரசிகர் தானா! குடும்பத்துடன் ஜெயிலர் படம் பார்க்கச் சென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ!

ரஜினியின் கம்பேக் படமான 'ஜெயிலர்' பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது. வெளியான ஏழு நாட்களில் ரூ.375 கோடி வசூலித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மாறுபட்ட நடிப்பு பார்வையாளர்களின் பாராட்டுகளைக் குவித்து வருவதால் படத்தின் மீதான ஆர்வம் குறையாமல் இருக்கிறது.

சன் பிக்சர்ஸ் பேனரில் கலாநிதி மாறன் தயாரித்துள்ள கோலிவுட் திரைப்படமான 'ஜெயிலர்' நெல்சன் திலீப்குமார் இயக்குகியுள்ளார். அனிருத் இசையில் உருவான இந்தப் படத்தில் ரஜினிகாந்தைத் தவிர, கேரளாவின் மெகாஸ்டார் மோகன்லால், 'செஞ்சுரி ஸ்டார்' சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் நடித்துள்ளனர். விநாயகன், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, சுனில், மிர்னா மேனன், யோகி பாபு, தமன்னா பாட்டியா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் கலக்கியுள்ளனர்.

இந்தியாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் ரஜினிகாந்த். ஜெயிலர் படத்தின் ஹுக்கும் பாடலில் சூப்பர் சுப்பு உசுர கொடுக்க கோடி பேரு என்று எழுதியதற்கு ஏற்ப அவருக்காக பல கோடி பேர் இருக்கிறார்கள். அவரது எளிமை, பேச்சு, நடை, உடை என அத்தனையையும் பலர் ஃபாலோ செய்துவருகின்றனர். அவர் கடைசியாக நடித்த தர்பார், அண்ணாத்த படங்கள் ரஜினிக்கு சரியான வெற்றியை பெற்றுத் தரவில்லை.

உங்க மொபைலுக்கும் இதே மாதிரி எமர்ஜென்சி அலர்ட் வந்துச்சா? இதுக்கு என்ன அர்த்தம்?

இந்தச் சூழலில் ஜெயிலர் படம் படம் ரிலீஸாவதற்கு சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றுவிட்டார். ஆண்டு தோறும் மேற்கொள்ளும் அவரது இமயமலை பயணம் கொரோனா காரணமாக தடைபட்டிருந்து. இந்த முறை கடந்த நான்கு ஆண்டுகளுக்குப்பின் இமயமலைக்குச் சென்றார்.

இந்தப் பயணத்தை முடித்த ரஜினிகாந்த் திடீரென வட மாநிலத்தில் அரசியல் தலைவர்களை ஒவ்வொருவராகச் சந்தித்து வருகிறார்.முதலில் ஜார்க்கண் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தார். பின், ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எம்.ஏ. அம்பா பிரசாத் ரஜினிகாந்தைத் தேடி வந்து சந்தித்தார்.

பின், உ.பி, சென்ற ரஜினி அந்த மாநில ஆளுநர் ஆனந்தி பென்னைச் சந்தித்தார். துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியாவைச் சந்தித்து அவருடன் ஜெயிலர் படத்தையும் ஒன்றாகப் பார்த்து மகிழ்ந்தார். அடுத்த சந்திப்பாக மாலையில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் சந்திக்க இருக்கிறார். இந்தச் சந்திப்புகளைத் தொடர்ந்து நாளை அயோத்தி ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய இருக்கிறார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுகவின் நீட் எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நாளைக்கு நடக்காதாம்! மாற்று தேதிக்கு ஒத்திவைப்பு!

click me!