உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய ரஜினிகாந்த் | வைரல் வீடியோ

By Raghupati R  |  First Published Aug 19, 2023, 9:01 PM IST

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். இதுதொடர்பான வீடியோ மற்றும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி தற்போது திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்நிலையில், ஜெயிலர் படம் ரிலீசாவதற்கு முன் இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் கிளம்பிய  நடிகர் ரஜினிகாந்த், ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி குகை உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்று தற்போது உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் எனப் பயணித்து வருகிறார்.

Tap to resize

Latest Videos

நடிகர் ரஜினிகாந்த், இமயமலையில் ஆன்மீக பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சென்றார். அம்மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்த ரஜினிகாந்த், பின்னர் யாகோடா ஆசிரம குரு பரம்ஹம்ச யோகானந்தாவை சந்தித்து ஆசி பெற்றார்.

அதன்பின், ராஞ்சி பயணத்தை முடித்துவிட்டு, நேற்றிரவு விமானம் மூலம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ சென்றடைந்தார். இன்று காலை உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் கேஷவ் பிரசாத் மௌரியாவுடன் தனது ஜெயிலர் படத்தைப் பார்த்து ரசித்தார். 

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து வணங்கிய ரஜினிகாந்த் | | | | | | pic.twitter.com/kSncN2ofQz

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

இந்த நிலையில், தற்போது முதல்வர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது மரியாதை நிமிர்த்தமாக அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். யோகி ஆதித்யநாத்தை சந்தித்த ரஜினிகாந்த் அவரது காலில் விழுந்து தொட்டுக் கும்பிட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay : கேரளாவில் படுதோல்வியை சந்தித்த வாரிசு.. அப்போ லியோ கதி.? தளபதி விஜய் படத்துக்கு வந்த சிக்கல்

click me!