எப்பா சாமி வசூல் கொட்டோ கொட்டுனு கொட்டணும்... தலைவர் படம் ஜெயிக்கணும்... மண் சோறு சாப்பிட்டு ரசிகர்கள் விரதம்

Published : Nov 28, 2018, 03:35 PM IST
எப்பா சாமி வசூல் கொட்டோ கொட்டுனு கொட்டணும்... தலைவர் படம் ஜெயிக்கணும்... மண் சோறு சாப்பிட்டு ரசிகர்கள் விரதம்

சுருக்கம்

2.0 ரிலீசுக்கு பின் சூப்பர் ஸ்டாரை யாராலும் அசைக்க முடியாது, இந்த படம் செம்ம வசூல் அல்ல வேண்டும் என ரஜினி ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு விரதமிருக்கின்றனர்.

ஷங்கர் இயக்கத்தில் சுமார் ரூ.600 கோடி பட்ஜெட்டில் அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள ‘2.0’ 14 மொழிகளில் வெளியாகும் இப்படம், வெற்றியடைய வேண்டி ரஜினி ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு விரதம் இருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே சுமார் 10000 தியேட்டர்களில் உலகம் முழுவதும் ரிலீசாகும் ‘2.0’ வெற்றியடைய வேண்டி, மதுரையில் உள்ள கோவில்களில் ரஜினி ரசிகர்கள் சிறப்பு பூஜை நடத்தி, விரதம் இருந்து வழிபாடு செய்துள்ளனர். அதேபோல, அங்கபிரதட்சணம், மண் சோறு சாப்பிடுவது போன்ற கடினமான வேண்டுதல்களையும் நிறைவேற்றியுள்ளனர்.

ரஜினியின் இந்த பிரமாண்ட படத்திற்குப் பின், அரசியலில் ஈடுபட்டு தமிழக முதல்வராக வேண்டும். அதில் அவருக்கு எந்த சிக்கலும் வரக் கூடாது. அவர் உடல்நலத்துடன் சிறப்பாக வாழ வேண்டும் என்பதனால் பிரார்த்தனை செய்கிறோம். மேலும் 2.0 ரிலீசுக்கு பின் சூப்பர் ஸ்டாரை யாராலும் அசைக்க முடியாது என ரஜினி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மாற்றப்படும் பராசக்தி ரிலீஸ் தேதி... ஜனநாயகனை காலி பண்ண என்னென்ன பண்றாங்க பாருங்க..!
அய்யய்யோ மீனா கண்டுபிடிச்சிட்டாளே... சீட்டிங் பண்ணி சிக்கிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்