2 . 0 ஒரு டிக்கட்டின் விலை ரூ.5000 ! அதிகார பூர்வமாக வெளியிட்ட திரையரங்கம்!

Published : Nov 28, 2018, 02:32 PM IST
2 . 0 ஒரு டிக்கட்டின் விலை ரூ.5000 ! அதிகார பூர்வமாக வெளியிட்ட திரையரங்கம்!

சுருக்கம்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள "2 . ௦" திரைப்படம் மிக பிரமாண்டமாக நாளை வெளியாக உள்ளது. 

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள "2 . ௦" திரைப்படம் மிக பிரமாண்டமாக நாளை வெளியாக உள்ளது. 

ரஜினி ரசிகர்கள் இப்போதே திரைப்படத்தை வரவேற்க தயாராகி விட்டனர். திரையங்கங்களில் பிரமாண்ட கட்டவுட்கள் வைத்து பிரமிக்க வைத்து வருகிறார்கள். 

தமிழகத்தில் மட்டும் சுமார் 700 க்கும் மேற்பட்ட திரையரங்கங்களில் வெளியாகும் '2 .0 ' படத்திற்கு வட இந்தியாவில் அதிக படியான எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் முதல் முறையாக தமிழ் படம் ஒன்றின் டிக்கெட் விலை அதிகாரபூர்வமாக 5000 ரூபாய்க்கு விற்பனையாகும் என வட இந்திய திரையரங்கம் ஒன்று ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

அதே போல் இப்படி ஒரு சிறப்பை பெட்ரா முதல் படம்  2.O. அதனால் தென் மாநிலங்களை காட்டிலும் குறைவான தியேட்டர்களில் வெளியாகும் வட இந்தியாவில் அதிக வசூல் குவிக்க வாய்ப்பிருக்கிறது. 

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களில் சுமார் 2500 திரைகளில் 2.0 ரிலீஸ் செய்யப்படுகிறது. இதைவிட குறைவாகவே வட இந்தியாவில் தியேட்டர்களில் 2.O வெளியிடப்பட்டாலும் டிக்கெட் கட்டணம் அதிகம் என்பதால் மொத்த வசூல் அதிகரிக்கும். உலகம் முழுவதும் சுமார் 7000 திரைகளில் 14 மொழிகளில் நாளை வெளியாகும் 2.O திரைப்படம் முதல் நாள் மொத்த வசூல் 150 கோடியை எட்டிப் பிடிக்கும் வாய்ப்பு இருக்கிறது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Theatre and OTT Releases : அன்பே டயானா முதல் அருள்வான் வரை... ஜூலை 17ல் தியேட்டர் & ஓடிடியில் செம ட்ரீட் வெயிட்டிங்
மும்பையில் நடைபெற்ற அகான்ஷா & சரண் திருமண வரவேற்பு விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள்