தளபதி விஜய் ரசிகரை தரதரவென இழுத்துபோட்டி தர்ம அடி கொடுத்த ரஜினி ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ

By Ganesh A  |  First Published Aug 10, 2023, 3:14 PM IST

சென்னை வெற்றி திரையரங்கில் ஜெயிலர் படம் பார்க்க வந்த விஜய் ரசிகரை ரஜினி ரசிகர்கள் தாக்கிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.


சூப்பர்ஸ்டார் சர்ச்சை தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே தலைதூக்கி உள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த மாதம் நடைபெற்ற ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, காக்கா, கழுகு ஆகியவற்றை ஒப்பிட்டு ஒரு கதை சொன்னார். அதில் அவர் காக்கா என குறிப்பிட்டது நடிகர் விஜய்யை தான் என ஒரு தரப்பு கிளப்பிவிட, அது சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆனது.

இதன்காரணமாக கடந்த சில வாரங்களாக விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கிடையே சோசியல் மீடியாவில் மோதல் வெடித்துள்ளது. இருதரப்பு ரசிகர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி பதிவிட்டு வந்தனர். இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இப்படத்தின் ரிலீஸை ரஜினி ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... பகை உணர்ச்சியில் விஜய் ரசிகர்கள்.! 'ஜெயிலர்' படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் பரப்படுகிறதா? வெடித்த பஞ்சாயத்து!

ஜெயிலர் படத்தின் முதல் காட்சி தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது. அந்த வகையில் சென்னையில் உள்ள புகழ்பெற்ற வெற்றி திரையரங்கிலும் முதல் ஷோ 9 மணிக்கு திரையிடப்பட்டது. இந்த படத்தை பார்க்க சில விஜய் ரசிகர்களும் வந்திருக்கின்றனர். அப்போது தியேட்டரில் அவர்கள் ரஜினி ஒழிக என கோஷமிட்டதாக கூறப்படுக்கிறது. இதனால் டென்ஷன் ஆன ரஜினி ரசிகர்கள், கோஷம் போட்ட விஜய் ரசிகரை பிடித்து அடி வெளுத்து வாங்கி இருக்கின்றனர்.

Pavatha Polanthutanuka 😂pic.twitter.com/rJfzWuVzu1

— Karthik 💜🎀 (@_Karthik_Tweets)

ரஜினி ஒழிக என கத்திய விஜய் ரசிகர் தியேட்டரில் இருந்து வெளியே வந்தபோது அவரை துரத்தி பிடித்து, தியேட்டர் வாசலிலேயே ரஜினி ரசிகர்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை டுவிட்டரில் மோதி வந்த விஜய் - ரஜினி ரசிகர்கள் தற்போது அடிதடியில் இறங்கிய சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் படியுங்கள்... ஜெயிலர் படம் பார்க்க ஜப்பானில் இருந்து பறந்து வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வெறித்தனமான ரசிகர்கள்

click me!