" தலைவரு நிரந்தரம்” களைகட்டும் ஜெயிலர் கொண்டாட்டம்.. சிங்கப்பூரில் மாஸ் காட்டிய ரஜினி ரசிகர்கள்..

By Ramya s  |  First Published Aug 10, 2023, 12:12 PM IST

2 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் ரஜினி படம் என்பதால் அவரின் ரசிகர்கள் இப்படத்தை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.


மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். அனிருத் இசையில் உருவாகி உள்ள ஜெயிலர் படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. இப்படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராப், ஷிவ் ராஜ்குமார் என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில் இன்று இப்படம் வெளியாகி உள்ளது.

2 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் ரஜினி படம் என்பதால் அவரின் ரசிகர்கள் இப்படத்தை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் இப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்து வருகிறது. ட்விட்டரில் #JailerFDFS, #FirstHalf #ThalaivarNirandharam #Thalaivar #Nelson #Jailer போன்ற ஹேஷ்டாகுகள் ட்ரெண்டாகி வருகின்றன. மேலும் ஜெயிலர் படத்தை கொண்டாடும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

ஜெயித்தாரா ஜெயிலர்?... ரஜினிக்கு கம்பேக் கொடுத்தாரா நெல்சன்? - Jailer முழு விமர்சனம் இதோ

குறிப்பாக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் ஜெயிலர் பட ரிலீஸை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சிங்கப்பூரில் ரஜினி ரசிகர்கள் ஜெயிலர் படத்தை கொண்டாடும் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் ரஜினி கட் – அவுட்-க்கு மாலை அணிவிக்கும் ரசிகர்கள் ” தலைவரு நிரந்தரம்” என்று முழக்கமிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Jailer Singapore celebrations pic.twitter.com/JFbyvd0xBI

— Rajinifans.com (@rajinifans)

 

ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த படம் வசூல் ரீதியில் வெற்றி பெற்றாலும், கலவையான விமர்சனங்களையே பெற்றது. மறுபுறம் நெல்சன், விஜய்-யை வைத்து இயக்கிய பீஸ்ட் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது. எனவே நெல்சன் ரஜினியை வைத்து எப்படி இயக்கப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் தற்போது ஜெயிலர் படத்திற்கு கிடைத்துள்ள பாசிட்டிவான விமர்சனங்கள் ரஜினிக்கு மட்டுமின்றி, நெல்சனுக்கும் மிகப்பெரிய கம்பேக்காக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஒரே தியேட்டரில் FDFS... தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை மீண்டும் ஒன்று சேர்த்த ஜெயிலர்

click me!