
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் 169 படமான ஜெயிலர் திரைப்படம் இன்று நாடு முழுவதும் வெளியாகி இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனிடையே இன்று தமிழக முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் சேலத்தில் இன்று காலை 9 மணிக்கு வெளியானது. இந்த திரைப்படத்தை மகிழ்ச்சியுடன் காண வந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், மேளதாளம் முழங்க கொண்டாடினர் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்க வாசலில் ரஜினி அவர்களின் புகைப்படம் கொண்ட ஸ்டேஜ் அமைக்கப்பட்டுள்ளது அந்த ஸ்டேஜின் முன்பாக செல்பி புகைப்படங்களும் இளைய தலைமுறையினர் எடுத்துக் கொண்டனர்.
இதையும் படியுங்கள்... ஜெயித்தாரா ஜெயிலர்?... ரஜினிக்கு கம்பேக் கொடுத்தாரா நெல்சன்? - Jailer முழு விமர்சனம் இதோ
இதேபோல் கோவை ரயில் நிலையம் அருகே உள்ள சாந்தி திரையரங்கில் ரசிகர்கள் ரஜினிகாந்த்க்கு பேனர் வைத்து பால் அபிஷேகம் செய்து கொண்டாடி உள்ளனர். அதேபோல மேல தாளங்கள் முழங்க பெண் ரசிகர்கள் உற்சாக நடனத்துடன் படத்தை வரவேற்ற வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுதவிர சென்னையில் ஜெயிலர் படம் ரிலீஸ் ஆவதை ஒட்டி, பொதுமக்களுக்கு ரஜினி ரசிகர்கள் அன்னதானம் வழங்கினர். இப்படி ஜெயிலர் படத்தின் கொண்டாட்டங்கள் தமிழகம் முழுவதும் களைகட்டி உள்ளன. படமும் பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வருவதால், ரஜினி ரசிகர்கள் செம்ம ஹாப்பியாக உள்ளனர்.
இதையும் படியுங்கள்... அக்கட தேசம் முதல் அமெரிக்கா வரை... ஜெயிலர் ரஜினி ரசிகர்கள் அலப்பறையான கொண்டாட்டங்கள் இதோ
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.