அமெரிக்காவில் ஒரு ரஜினி ரசிகனின் வெறி ஆட்டம் ! இது எல்லாம் தலைவர் ஒருவருக்கு மட்டுமே சாத்தியம்!

Published : Jan 08, 2019, 05:31 PM IST
அமெரிக்காவில் ஒரு ரஜினி ரசிகனின் வெறி ஆட்டம் ! இது எல்லாம் தலைவர் ஒருவருக்கு மட்டுமே சாத்தியம்!

சுருக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக மக்கள் அனைவராலும் விரும்பப்படும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் எது செய்தாலும் அதில் ஒரு தனி ஸ்டைல் இருப்பதால், என்னவோ... எத்தனை முன்னணி நடிகர்கள் வந்தாலும், பல ஹிட் படங்களை அடுக்கடுக்காக கொடுத்தாலும் எப்போதும் தலைவர் ரஜினிக்கு உள்ள மவுசு மற்றும் மாஸ் கொஞ்சம் கூட குறைவதில்லை. இதனை ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகிறார்கள் சூப்பர் ஸ்டாரின் வெறித்தனமான ரசிகர்கள்.  

அட இங்கு தான் அப்படி என்று பார்த்தல் வெளிநாட்டிலும், தலைவர் தான் கெத்து என தன்னுடைய கலை மூலம் நிரூபித்துள்ளார் ரசிகர் ஒருவர்.

சூப்பர் ஸ்டார் மீது வைத்துள்ள பாசத்தை, அமெரிக்காவை சேர்த்த ரசிகர் ஒருவர், தன்னுடைய மர சிற்பத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இந்த ரசிகர் அவருடைய வீடு முன்பு உள்ள கார்டனில் உள்ள மரத்தை வெட்டி, அதில் ரஜினி மக்கள் மன்றத்தின் சின்னத்தை சிலையாக வடித்து அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்து ரஜினி ரசிகர்கள், இந்த சிற்பத்தை வடித்த வெறித்தனமான ரசிகரை கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் பலர் சமூகவலைத்தளத்தில், "அமெரிக்காவில் இப்படி ஒரு வெறித்தனமான ரசிகன் இருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மட்டுமே சாத்தியம் என இந்த புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

இன்னும் இரண்டு நாட்களில் ரஜினிகாந்த், இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில், நடித்துள்ள 'பேட்ட' படமும் வருவதால், ஏற்கனவே செம்ம குஷியில் இருந்த ரஜினி ரசிகர்களுக்கு, இப்படி ஒரு ரசிகன் அதுவும் அமெரிக்காவை சேர்ந்த ரசிகன் இருந்தால் சொல்லவா வேண்டும், பேட்ட படத்தின் ப்ரோமோஷன் ஒரு பக்கம் பறக்க இந்த புகைப்படமும் ஒரு பக்கம் பரவி வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?