பட்டப்பகலில் ஃபுல் போதையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்ப முயன்ற நடிகர் சக்தி! மடக்கி பிடித்த மக்கள்!

Published : Jan 08, 2019, 05:05 PM IST
பட்டப்பகலில் ஃபுல் போதையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்ப முயன்ற நடிகர் சக்தி! மடக்கி பிடித்த மக்கள்!

சுருக்கம்

பிரபல நடிகரும், இயக்குனர் பி.வாசுவின் மகனுமான சக்தி, குடித்து விட்டு, நின்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன்றபோது மக்கள் அவரை மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

பிரபல நடிகரும், இயக்குனர் பி.வாசுவின் மகனுமான சக்தி, குடித்து விட்டு, நின்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன்றபோது மக்கள் அவரை மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'நடிகன்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சக்தி, 2007 ஆம் ஆண்டு 'தொட்டால் பூ மலரும்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து 'ஆட்ட நாயகன்', 'நினைத்தாலே இனிக்கும்', உள்ளிட்ட பல படங்களில் நடித்தர். ஆனால் இவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்பதால், பிசினஸ், மற்றும் பல்வேறு வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் மீண்டும் திரை துறையில் ஜொலிக்க விரும்பிய சக்தி, நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய, பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இவர், பின் நடன இயக்குனரும் இவருடைய நெருங்கிய தோழியான காயத்திரி ரகுராம் பேச்சை கேட்டு நடந்து கொண்டதால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

இதைத்தொடர்ந்து தற்போது இவர் ஒரு சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

 இந்நிலையில், இவர் அண்ணா நகர், பகுதியில் பட்டப்பகலில் குடிபோதையில் கார் ஓட்டி வந்த போது, நிதானம் இல்லாமல், நின்று கொண்டிருந்த கார் மீது மோதிவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார். இவரை அங்கிருந்த மக்கள் மடக்கி பிடித்தனர். மேலும் நடிகர் சக்தி மீது அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?