விஜயை ஓவர்டேக் செய்ய அஜீத்துக்கு 200 அடியில் கட் அவுட்... திருச்செந்தூரில் தல ரசிகர்கள் காட்டிய விஸ்வாசம்...

Published : Jan 08, 2019, 04:23 PM ISTUpdated : Jan 08, 2019, 05:07 PM IST
விஜயை ஓவர்டேக் செய்ய அஜீத்துக்கு 200 அடியில் கட் அவுட்... திருச்செந்தூரில் தல ரசிகர்கள் காட்டிய விஸ்வாசம்...

சுருக்கம்

அஜீத் ரசிகர்கள் சுமார் ஒரு வாரத்துக்கு முன்பே ஊருக்கு வெளியே ஒரு பொட்டல்வெளியில் பணியைத்துவங்கி 20 அடி அகலமும் 200 அடி நீளமும் கொண்ட கட் அவுட்டை ரெடிசெய்து அசத்தியுள்ளனர். இந்த கட் அவுட் தற்போது வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

‘சர்கார்’ படத்துக்கு விஜய்க்கு வைக்கப்பட்ட 175 அடி கட் அவுட்டுக்கு சவால் விடும் வகையில் அஜீத் ரசிகர்கள் ‘விஸ்வாசம்’ படத்துக்கு 200 அடியில் கட் அவுட் வைத்து அசத்தியுள்ளனர்.

அஜீத்தும் விஜயும் சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் முக்கிய போட்டியாளர்களாகக் கருதப்பட்டு வருகின்றனர். இருவரது பட வசூல்களையும் ஒப்பிட்டு இந்த ‘தல’, ‘தளபதி’  ரசிகர்களும் கமெண்டுகள் போடுவது மீம்ஸ்கள் தயாரிப்பது, கலாய்ப்பது என்பதுபட ரிலீஸ் சமயங்களில் சர்வசாதாரணம். 


‘சர்கார்’ ரிலீஸ் சமயத்தில் கேரள மாநிலம்  கொல்லம் நகருக்கே வெளியே ஒரு மைதானத்தில் பட ரிலீஸுக்கு  மூன்று தினங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த அந்த 175 அடி உயர கட் அவுட் தான் இதுவரை இந்திய சினிமாவில் வைக்கப்பட்ட கட் அவுட்களிலேயே மிக உயரமானது என்று சொல்லப்பட்டது. அதை விஜயின் தீவிர ரசிகர்களான ‘கொல்லம் நண்பன்ஸ்’ என்ற குரூப் சாதித்திருந்தது. அதைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகள் கூட வர ஆரம்பித்துவிட்டார்கள்.

விஜய் குரூப்பின் அந்த சாதனையை  மறக்காமல் கவனத்தில் வைத்திருந்த திருச்செந்தூர் அஜீத் ரசிகர்கள் சுமார் ஒரு வாரத்துக்கு முன்பே ஊருக்கு வெளியே ஒரு பொட்டல்வெளியில் பணியைத்துவங்கி 20 அடி அகலமும் 200 அடி நீளமும் கொண்ட கட் அவுட்டை ரெடிசெய்து அசத்தியுள்ளனர். இந்த கட் அவுட் தற்போது வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

விஜய் கட் அவுட் அமைக்கப்பட்ட இடம் பரபரப்பான சுற்றுலாத்தளம் ஆனதுபோல் இந்த இடமும் சுற்றுலாத்தளமாகும் வாய்ப்பு நிச்சயம் உண்டு.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தளபதி ஃபேன்ஸ் ஆர் assemble: பரா சக்தி ஆனாலும் சரி ஓம் சக்தி ஆனாலும் சரி: ஒரு பேரே வரலாறு You Tube ரியாக்‌ஷன்!
உணவூட்டும் விவசாயத்திற்கு உயிர்யூட்டும் நந்தகுமார்; மண்ணைக் காக்க வந்த மாமனிதனின் சாதனைகள்!