
எழுபத்தெட்டு வயதான ரசிகையின் விருப்பத்தை நடிகர் ரஜினிகாந்த் பூர்த்தி செய்துள்ளார். தனது வீட்டுக்கு வரவழைத்த அந்த ரசிகைக்கு பொன்னாடை போர்த்தி ரஜினி பாராட்டியுள்ளார்.
அரசியல் கட்சி தொடங்கப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி அறிவித்தார். தனது ரசிகர் மன்றத்தின் பெயரை ரஜினி மக்கள் மன்றம் என
மாற்றினார். பிறகு, மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளை கடந்த 4 மாதங்களாக அவர் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் வருடம்தோறும் மேற்கொள்ளும் மருத்துவப் பரிசோதனை, சினிமா மற்றும் அரசியல் பணிகளுக்காக ரஜினிகாந்த் கடந்த 23 ஆம் தேதி
சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 11 நாட்கள் அமெரிக்காவில் தங்கியிருந்த அவர் சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய அவர், காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
பாடல் வெளியீட்டு விழாவின்போது பேசிய ரஜினி, எல்லாத்துக்கும் நேரம் இருக்கு... அந்த நேரம் விரைவில் வரும். அப்போது வருவேன். இன்னும் அந்த காலம் வரவில்லை. என்னை வாழவைத்த தமிழ் நெஞ்சங்களுக்கு நல்லது நடக்கும் என்று கூறியிருந்தார். அரசியல் கட்சி தொடங்கப்போகும் தேதி போன்றவை குறித்து அறிவிப்பார் என்று எதிபார்த்து காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த், தமது மன்ற நிர்வாகிகளுடன் சென்னையில் அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் 32 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். அதைத் தொடரந்து இளைஞரணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் ரஜினி நடத்தினார். நிர்வாகிகளிடம் பேசிய ரஜினி, ரஜினி மக்கள் மன்றத்துக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை தீவிரப்படுத்த சொன்னதாக தகவல் வெளியாகியது.
ரஜினி மக்கள் மன்றத்துக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் மன்ற நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். உறுப்பினர் சேர்க்கும் பணியில் மிகவும் வயதான பெண்மணி ஒருவர் ஈடுபட்டு வருகிறார். அவர் பெயர் சாந்தா. 78 வயதான இவர் உறுப்பினர்கள் சேர்ப்பு பணியைச் செய்து வருகிறார். இந்த நிலையில் சாந்தாவை, நடிகர் ரஜினிகாந்த் தனது இல்லத்துக்கு அழைத்து பாராட்டினார்.
ரஜினி மக்கள் மன்ற கிளை உறுப்பினர் சேர்க்கைப் பணியில் தீவிராக ஈடுபட்டு வரும் சாந்தாவின் ஒரே விருப்பம், ரஜினியை சந்தித்து தனது பணிகளைச் சொல்ல வேண்டும் என்ற ஆசைதானாம். இது குறித்த தகவலை அவர், ரஜினி மக்கள் மன்றத்தினரிடம் தெரிவித்தார். ரசிகர் மன்றம் மூலம் சாந்தா கூறிய தகவல் ரஜினிக்கு சென்றடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், சாந்தாவை தனது இல்லத்துக்கு வரவழைத்து அவருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினார். ரஜினி பாராட்டியதை சாந்தா
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.