Rajini super show : செம மாஸ்... இதுவரை பார்த்திடாத 90ஸ் ரஜினி.. சூப்பர் ஸ்டாரின் சிங்கப்பூர் விசிட்...

Kanmani P   | Asianet News
Published : Dec 30, 2021, 04:32 PM IST
Rajini super show : செம மாஸ்... இதுவரை பார்த்திடாத 90ஸ் ரஜினி.. சூப்பர் ஸ்டாரின் சிங்கப்பூர் விசிட்...

சுருக்கம்

Rajini super show : ரஜினிகாந்த மாஸ் காட்டி வந்த 90களில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஸ்பெஷல் சோவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது  பாட்ஷா பட ஸ்டைலில் மேடையில் தோன்றிய ரஜினி டைலாக் பேசி நடனமாடிய வீடியோ வெளியாகிவுள்ளது. ரசிகரால் பகிரப்பட்ட இந்த வீடியோ செம மாஸாக வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கியிருந்த இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூலை வாரிக்குவித்தது. சுமார் 200 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. 

அண்ணாத்த (Annaatthe) படம் வெற்றிகரமாக 50 நாட்களை கடந்துள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் டி இமான், ஒளிப்பதிவாளர் வெற்றி, இயக்குனர் சிவா உள்பட படக்குழுவினர் சிலரை தனது இல்லத்துக்கு அழைத்து, அவர்களுக்கு தங்க செயின் பரிசாக அளித்துள்ளார். ரஜினியின் இந்த திடீர் கிஃப்டால் இன்ப அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர், அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

இதையடுத்து ஹூட் செயலியில் அண்ணாத்த (Annaatthe) படம் 50 நாட்களை கடந்துள்ளது குறித்து ஆடியோ மெசேஜ் ஒன்றை பதிவிட்டுள்ளார் ரஜினி. அதில் அவர் பேசியதாவது: “கொரோனா வைரஸ் உள்ளிட்ட பல தடைகளைக் கடந்து, 2 ஆண்டுகளுக்கு மேலாக நிறைய சிரமங்களுக்கு இடையே இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. படம் ரிலீசானதும் மழை வந்து குறுக்கிட்டது. எதிர்மறை விமர்சனங்களும் அதிகம் வந்தன. 

இவற்றையெல்லாம் கடந்து 'அண்ணாத்த' படம் வெற்றி அடைந்துள்ளது. மழை இல்லை என்றால் இந்தப் படம் இன்னும் பெரிய வெற்றியை பெற்றிருக்கும். இதையெல்லாம் பார்க்கும் போது பாட்ஷா படத்தில் நான் பேசிய டயலாக் தான் நினைவுக்கு வருகிறது. ‘ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான், ஆனா கைவிட மாட்டான். ஆனா கெட்டவங்கள...’ என்று கூறி சிரித்தபடி பேசி முடித்திருக்கிறார் ரஜினி. 

இந்நிலையில் ரஜினிகாந்த மாஸ் காட்டி வந்த 90களில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஸ்பெஷல் சோவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது மேடையில் பாட்ஷா பட ஸ்டைலில் டைலாக் பேசி நடனமாடிய வீடியோ வெளியாகிவுள்ளது. ரசிகரால் பகிரப்பட்ட இந்த வீடியோ செம மாஸாக வைரலாகி வருகிறது.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!