ரஜினி நடத்தப்போகும் பிரமாண்ட மாநாடு -  அரசியலில் குதிப்பதற்கா...??? 

 
Published : Feb 06, 2017, 06:00 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
ரஜினி நடத்தப்போகும் பிரமாண்ட மாநாடு -  அரசியலில் குதிப்பதற்கா...??? 

சுருக்கம்

நடிகர் ரஜினிகாந்த் பலருக்கும், வெளியுலகிற்கு தெரியாதவாறு உதவிகள் செய்து வருகிறார், இதன் காரணமாகவே பல ரசிகர்கள் இவர் அரசியலுக்கு வர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் அவரோ அரசியல் வாய்ப்புகள் அவரை தேடி வந்தாலும், அனைத்தையும் ஒதுக்கிவிட்டு திரைப்பட வாழ்க்கை மற்றும் ஆன்மீகத்தில் மட்டுமே தொடர்ந்து ஆர்வம் காட்டிவந்தார்.

இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் நிலவும் சில அதிரடி மாற்றங்களால், மக்களே குழப்பத்தில் உள்ளனர். 

இதனால் தற்போது  அரசியலில் இறங்கும்  மனநிலையில் ரஜினி உள்ளதாக கூறப்படுகிறது . இதுகுறித்து பேச  ரஜினிகாந்த் வரும் மார்ச் மாதம் ரசிகர்களை ஒன்று திரட்டி பிரம்மாண்ட மாநாடு ஒன்றை நடத்த  திட்டமிட்டுள்ளாராம்.

இதற்காக அணைத்து மாவட்டங்களில் இவருடைய  ரசிகர்களை கணக்கெடுக்கும் பணி ரகசியமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது, மேலும்  ரஜினி பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லவிருப்பதாகவும்  ரசிகர்களுடன் கலந்தாலோசித்து  அரசியல் குறித்த முடிவை வெளியிடுவார் என சொல்லப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாடி இஸ் நோ மோர்; படையப்பா' ரீ-ரிலீசுக்கு அப்பாவின் புகைப்படத்துடன் வந்த பாச மகள்: திரையரங்கில் நெகிழ்ச்சி!
31 ஆண்டுகாலப் பந்தம்: ஒன்றாக 'சூர்ய நமஸ்காரம்' செய்யும் பிரபுதேவா, வடிவேலு: வைரலாகும் வீடியோ!