
நடிகை தமன்னா முன்னனி நடிகர்களுடன் எப்போதும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் என்பது அனைவரும் அறிந்தது தான்.
இவருக்கு தமிழிலும், தெலுங்கிலும் பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. இந்நிலையில் நேற்று ஒரு பேஷன் ஷோவில் கலந்து கொள்வதாக இருந்த தமன்னா திடீரென அதை கேன்சல் செய்துவிட்டு கண்கலங்கியப்படி மும்பைக்கு பறந்தார்.
ஏன் இப்படி செய்தார் என விசாரித்ததில் தமன்னா மிகவும் பாசம் வைத்துள்ள அவரது தந்தை உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவருக்கு தொலைபேசியில் உறவினர் ஒருவர் தொடர்புக்கொண்டு தெரிவித்ததாகவும் இதனை கேள்விப்பட்டதுமே அவரை பார்க்க உடனே சொந்த ஊருக்கு விமானத்தில் பறந்துள்ளார் .
இந்த சம்பவத்தை அறிந்த பல பிரபலங்கள் தமன்னாவை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு அவருடைய தந்தை உடல்நிலை பற்றி விசாரித்து வருவதாக கூறப்படுகிறது .
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.