
ரஜினிக்கு இடியாய் இறங்கியது, ஐஷ்வர்யா – தனுஷின் விவாகரத்து முடிவு. அவர்களை எப்படியும் சேர்த்துவைக்க வேண்டும் என்று ரஜினி பலமுறை சேர்த்தும், தனித்தனியாகவும் பேசிப் பார்த்தும் பலன் இல்லை. பிரிவு முடிவை அவர்கள் பகிரங்கமாக அறிவிக்க, அன்று காலை முதலே யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டிலிருந்து நிம்மதி தேடி எங்கோ போய்விட்டார் சூப்பர்ஸ்டார். அறிவிப்பு வெளியான காலை முதலே ரஜினி அவர் வீட்டில் இல்லையாம், ஒருவேளை மருத்துவமனையில் அட்மிட்டா..? என்று ஊடகத்துறையினர் பேசத் தொடங்கியபோது, இரவில் தனுஷ் – ஐஷ்வர்யாவின் பிரிவு அறிவிப்பு வந்தது. அப்போதுதான் ரஜினி வீட்டில் இல்லாமல் போனதன் காரணம் புரிந்தது.
திரைத் துறையிலும், குடும்ப வட்டாரத்திலும் உள்ள பெரியவர்களும், நண்பர்களும் ரஜினிக்காகவும், தனுஷின் தந்தை கஸ்தூரிராஜாவுக்காகவும், தனுஷ் – ஐஷ்வர்யாவிடம் பலமுறை பஞ்சாயத்து பேசி வருகின்றனர். மாறன் படத்திற்காக தனுஷும்..ஆல்பம் சாங்கிற்காக ஐஸ்வர்யாவும்..ஐதராபாத்தில் ஒரே ஹோட்டலில் தங்கி இருந்தனர்..இதன் மூலம் அடிக்கடி சந்தித்து கொள்ளும் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என ஊடகங்க கிசுகிசுத்தன.
தனுஷ்- ஐஸ்வர்யா குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் என பலரும் இருவரையும் தொடர்ந்து சமாதானப்படுத்தி வருகின்றனர்..சமீபத்தில் தனுஷின் அடுத்த படமான மாறன் திரைப்படத்தின் முதல் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. “ஏய்.. இது பொல்லாத உலகம்.. நீ ரொம்ப ஷார்ப்பாய் இரு..’’ என்று தொடங்கும் படல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பாடலின் நடுவே வரும், ”ஏன் வழி புடிச்சாலும் ஐ லவ் யூ மா.. நீ என்ன வெறுத்தாலும் ஐ லவ் யூமா..” என்ற வரிகள் தான். முதலில் பாட்டில் இந்த வரிகள் இல்லை என்றும் சமீபத்தில் தனுஷ் பாடலாசிரியர் விவேக்கிடம் இதுபோன்ற வரிகள் வேண்டும் என்று கேட்டு வாங்கி மீண்டும் பாடி ரிக்கார்டிங் செய்து கொடுத்ததாகவும் சொல்கிறார்கள் படக்குழுவினர். தனுஷ் தன் மனைவி ஐஷ்வர்யாவுடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பி, அவருக்காக இதை செய்திருப்பதாக வெளியான தகவல் ரசிகர்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது..
அதேபோல காதலர் தினத்தன்று ஐஸ்வர்யாவும் காதல் பாடலை வெளியிட்டிருந்தார்..ஆனால் விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு ஆங்கில நாளிதழான ஹிந்துஸ்தான் டைம்ஸ் க்கு பேட்டியளித்த ஐஸ்வர்யா..காதல் என்பது ஒருவருடன் மட்டும் அடங்கி விடுவதில்லை..நான் என் பெற்றோர்..பிள்ளைகளை காதலிக்கிறேன் என்று கூறியுள்ளார்..இந்த பெட்டியில் தனுஷ் குறித்து எந்த கருத்தையும் அவர் தெரிவிக்காதது பிரிந்து வாழும் முடிவை ஐஸ்வர்யாக உறுதியாக பற்றியுள்ளதை குறிப்பதாக தெரிகிறது..ஆனால் இன்னும் திசைமுக ஊடகத்தில் அவரது பெயர் ஐஸ்வர்யா தனுஷாகவே இருந்து வருவது குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது..
இதற்கிடையே மகளின் விவாகரத்து அறிவிப்பால் மனம் உடைந்துள்ள ரஜினிகாந்த்...இதுகுறித்து செய்தியாளர்களுக்கு சந்திக்க தயங்கியதன் காரணமாகவே ரஜினி ஓட்டளிக்க வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது...வெளியில் சொல்ல இயலாத துக்கத்தில் இருக்கும் ரஜினி சமீபத்தில் நெருங்கிய நண்பர்களிடம் தனுஷ் தனது மருமகன் இல்லை மூத்த மகன் என கூறியுள்ளார்...ரஜினி இந்த பாசத்திற்காவது தனுஷ் மனமிறங்கி விவாகரத்து முடிவை கைவிடுவாரா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.