Me Too மூவ்மெண்ட்டை பெண்கள் தவறாக பயன்டுத்தக் கூடாது… வைரமுத்துவுக்கு ஆதரவு தெரிவித்த ரஜினிகாந்த் !!

Published : Oct 20, 2018, 08:51 PM IST
Me Too   மூவ்மெண்ட்டை பெண்கள் தவறாக பயன்டுத்தக் கூடாது… வைரமுத்துவுக்கு ஆதரவு தெரிவித்த  ரஜினிகாந்த் !!

சுருக்கம்

மீ டூ என்பது பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும்  எனவும் இஅத நேரத்தில்  பெண்கள் அதனை தவறான வழியில் பயன்படுத்தக்கூடாது எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும்  பேட்ட என்கின்ற படத்தின் படப்பிடிப்பு நேற்று முடிவடைந்தது. இதனை அடுத்து வாராணாசியில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர்,  டிசம்பர் 12-ம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு இல்லை எனவும், கட்சி துவங்குவதற்கான பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தாம் வரவேற்பதாகவும், அதே நேரத்தில்  ஐதீகம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், மீ டூ என்பது பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் எனவும், பெண்களும் அதனை தவறான வழியில் பயன்படுத்தக்கூடாது எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்தும், கவிஞர் வைரமுத்து நல்ல நண்பர்கள் என்றாலும், பாலியல் பிரச்சனையில் வைரமுத்து சிக்கிய பிறகு அவர் கருத்து தெரவிக்காமல் இருந்தார். ஆனால் மீ டூ வை  பெண்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது என தெரிவித்திருப்பது வைரமுத்துவுக்கு மறைமுகமான ஆதரவாகவே பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!