
சமீபகாலமாகப் பணியிடங்களில் பாலியல் அத்துமீறல்களை எதிர்கொண்ட பெண்கள் அந்தச் சம்பவங்களை `மி டூ’ என்கிற பெயரில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தங்களை அடையாளம் காட்டியோ, காட்டாமலோ, அதேபோல காரணமான ஆண்களையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சுட்டிக்காட்டும் இந்த `மி டூ #MeToo’ கேம்பைன் கடந்த சில நாட்களாக தமிழகத்திலும் குறிப்பாக, தமிழ் சினிமாவில் பரபரப்பைக் கிளப்பிவிட்டிருக்கிறது.
கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார்’ என, பாதிக்கப்பட்ட ஒரு பெண் அனுப்பியதாகச் சில மெசேஜ்களை சந்தியா மேனன் என்கிற பத்திரிகையாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்ததுதான் இந்த விவகாரத்தின் தொடக்கப்புள்ளி.
அந்த ட்வீட்டை ரீ ட்வீட் செய்த பின்னணிப் பாடகி சின்மயி , வைரமுத்து தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த வைரமுத்து, முடிந்தால் வழக்கு தொடருங்கள், ஆதாரத்தை திரட்டி வைத்திருக்கிறேன் என கூறியிருந்தார்.
இது தொடர்பாக இன்று பேட்டியளித்த பாடகி சின்மயி, வைரமுத்து மீது வழக்கு தொடுக்கப் போவதாக தெரிவித்தார். இந்நிலையில் தன் மீது தொடர் குற்றச்சாட்டுக்கள் கூறி வந்தாலும், நான் அசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டி வைத்திருப்பதாக வைரமுத்து தைரியமாக கூறியதற்காக காரணம் தற்போது தெரியவந்துள்ளது.
இது முழுக்க, முழுக்க அரசியல் என்கிறார் வைரமுத்து. ஆண்டாள் குறித்து அவர் சொன்ன கருத்து பெரும் சர்ச்சை மற்றும் போராட்டங்களில் முடிந்தது. அப்போது பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, அவருக்கு எதிராக கடுமையான விமர்சனம் செய்து வந்தார்.
இப்போது அதற்கு பழி வாங்கவே எச்.ராஜா,சின்மயியை தனது பிடிக்குள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அவரது வழிகாட்டுதலின்படி தான் சின்மயி தொடர்ந்து போராடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக சின்மயிக்கு பெங்களூருவில் ஒரு ஃபிளாட் வீடு வாங்கித்தர பேரம் பேசப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. இது தொடர்பான ஆதாரங்கள் வைரமுத்து வசம் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது அனைத்து தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.