இதுதான் நடந்தது! மீடூ புகாருக்கு பதிலடி கொடுத்து அதிரடி முடிவை தெரிவித்த ஆக்ஷன் கிங் அர்ஜுன்!

Published : Oct 20, 2018, 07:57 PM ISTUpdated : Oct 21, 2018, 07:00 AM IST
இதுதான் நடந்தது! மீடூ புகாருக்கு பதிலடி கொடுத்து அதிரடி முடிவை தெரிவித்த ஆக்ஷன் கிங் அர்ஜுன்!

சுருக்கம்

தென்னிந்திய நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீடூ என பதிவிட்டு, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக  தெரிவித்தார் இது கோலிவுட் திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தென்னிந்திய நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீடூ என பதிவிட்டு, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக  தெரிவித்தார் இது கோலிவுட் திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மீ டூ எதிர்ப்பார்த்ததை விட பெரிய அளவில் விஸ்வரூபன் எடுத்து வருகிறது. இதற்கிடையில் பாடகி சின்மயி வைரமுத்து மீது தொடுத்துள்ள பல்வேறு குற்ற சம்பவங்கள் தான்  மக்கள் மத்தியில் பெரும் பரவலாக பேசப்பட்டு  வருகிறது. 

அதன் பின்னர் பல பெண்கள் தாமாக முன்வந்து மீ டூ  என பதிவிட்டு தன்னிடம் தவறாக நடந்துக்கொள்ள முயற்சி செய்த நபர்கள் மீது பாலியல் வன்புணர்வு புகார்களை தெரிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் தற்போது வரை பல்வேறு பிரபலங்கள் பெயர் வெளிவந்த வண்ணம் உள்ளது.

தற்போது கன்னட நடிகையான சுருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜூன் உடன் 'விஸ்மயா' என்னும் திரைப்படத்தில் நடித்தப்போது அர்ஜுன் தன்னுடைய முதுகை தடவி பாலியல் சீண்டல் செய்ததாக புகார் கொடுத்துள்ளார். இது கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹரிஹரனுக்கு பதிலடி கொடுத்துள்ள நடிகர் அர்ஜுன், இந்த படத்தில் தனக்கும் ஸ்ருதிக்கு அதிகப்படியாக நெருக்கமான சீன்கள் இருந்ததாகவும், அதனை நானே இயக்குனரிடம் வேண்டாம் என கூறிவிட்டேன். இருப்புனும் இவர் ஏன் இதுபோன்று ஒரு அவதூறு குற்றச்சாட்டை கூறியுள்ளார் என தெரியவில்லை. தன் மீது பொய்யாக புகார் கொடுத்துள்ள நடிகை ஸுருதி மீது மான நஷ்டஈடு வழக்கு தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!