Rajini praise to 83 : கமல் வெளியிட்ட 83..பாராட்டி தள்ளிய சூப்பர்ஸ்டார்...என்ன விஷயம் தெரியுமா?

Kanmani P   | Asianet News
Published : Dec 29, 2021, 07:06 AM IST
Rajini praise to 83 :  கமல் வெளியிட்ட 83..பாராட்டி தள்ளிய சூப்பர்ஸ்டார்...என்ன விஷயம் தெரியுமா?

சுருக்கம்

Rajini praise to 83 : 83 படத்தை பார்ததுவிட்ட பாராட்டியுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்  "என்ன ஒரு அருமையான படம்! பிரம்மிக்க தக்க படம்" என படக்குழுவினருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

இந்தியாவில் கிரிக்கெட் அணியின் ஒரு முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுவது கடந்த  1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றியை தன வசம் ஆக்கியதே.  கபில் தேவ் தலைமையில் அந்த தொடரில் பங்கேற்ற இந்திய அணி அதுவரை நடைபெற்றிருந்த 2 உலகக் கோப்பைகளையும் வெற்றி பெற்றிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை இறுதிப் போட்டியில் சந்தித்த கபில்தேவ் (Kapil Dev) தலைமையிலான இந்திய அணி, அபாராமாக விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியதுடன், முதல் முறையாக உலகக்கோப்பையையும் கைப்பற்றி வரலாறு படைத்தது.

அதன்பிறகு கிட்டதட்ட 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011 ஆம் ஆண்டில் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) தலைமையிலான இந்திய அணி 2வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது. 

இவ்வாறு இந்திய அணி தனது பலத்தை நிலைநாட்ட முதல் உலக கோப்பை மையமாக கொண்ட 83 படத்தை  இயக்குநர் கபீர்கான் (Kabir Khan) இயக்கியிருக்கிறார். கபில்தேவ்வாக ரன்வீர் சிங் (Ranveer Singh), தமிழக வீரர் ஸ்ரீகாந்தாக -ஜீவா (Actor Jiiva) உள்ளிட்டோர் 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்தவர்கள் போல் நடித்துள்ளனர். 1983 ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்றதையும், கபில்தேவின் வாழ்க்கை வரலாற்றையும் அடிப்படையாக வைத்து கதைகரு உருவாக்கப்பட்டுள்ளது. தீபிகா படுகோன் (Deepika Padukone) உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் ’83’ திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ தொகுப்பை துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் இடம்பெறச் செய்தது படக்குழு. அத்துடன் கிருஸ்துமஸ் தினமான டிசம்பர் 24 ஆம் தேதி படம் ரிலீஸ் செய்யபட்டது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 4 மொழிகளில் இப்படம் வெளியானது. இதில் தமிழ் மொழி வெளியீட்டை கமலின் ராஜ் கமல் நிறுவனம் கைப்பற்றி படத்தை வெளியிட்டது.

இந்நிலையில் 83 படத்தை பார்ததுவிட்ட பாராட்டியுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்  "என்ன ஒரு அருமையான படம்! பிரம்மிக்க தக்க படம்" என படக்குழுவினருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்
விஜய் கட்சியில் சேரும் முக்கிய நடிகர்..! அவர் துணிவு ரொம்ப பிடிக்கும்னு பேட்டி