மிரட்டிய தம்பிகள்..! கண்டு கொள்ளாத ரஜினி..! விமர்சித்த ரசிகர்கள்... லாரன்ஸ்க்கு ஏற்பட்ட பரிதாபம்..!

By vinoth kumarFirst Published Dec 25, 2019, 10:36 AM IST
Highlights

ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு சீமான் குறித்து ரஜினி இருக்கும் போதே லாரன்ஸ் பேச ஆரம்பித்துவிட்டார். தர்பார் திரைப்பட விழா மேடையில் சீமானை மறைமுகமாக தாக்கிப் பேசிய லாரன்ஸ், பிறகு ரஜினி ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த அவரது பிறந்த நாள் விழாவில் சீமானை நேருக்கு நேராக கேள்வி கேட்டு பின்னி பெடல் எடுத்தார். லாரன்சின் இந்த பேச்சுகள் நாம் தமிழர் கட்சியினருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இனி தான் பேசுவதற்கும் ரஜினிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று லாரன்ஸ் வெளியிட்ட அறிக்கை அவரது மனம் புண்பட்டு அதன் மூலமாக வெளிப்பட்டது என்கிறார்கள்.

நடிகர் ரஜினி அரசியல் பிரவேசம் என்று அறிவித்தது முதல் சமூக வலைதளங்களில் திமுக ஐடி டீமும், நாம் தமிழர் ஆதரவாளர்களும் கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வருகிறார்கள். இவர்களுக்கு பதிலடியாக ரஜினி ரசிகர்கள் மட்டுமே களம் இறங்கினர். கூடுதலாக கராத்தே தியாகராஜன், இயக்குனர் பிரவீண் காந்தி, காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் போன்றோர் மட்டுமே ரஜினி ஆதரவு கருத்துகளை வெளியிட்டனர்.

ஆனால் சீமான், திமுக ஐடி விங் போன்ற பலமான இரண்டு அமைப்புகளுக்கு எதிராக ரஜினி ரசிகர்களால் ட்விட்டர் டிரெண்டிங்கை தாண்டி எதுவும் செய்ய முடியவில்லை. தமிழகத்தின் முன்னணி ஊடகங்களிலும் கூட ரஜினி எதிர்ப்பாளர்களுக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டது. இதனால் ரஜினிக்கு ஆதரவாக பேச ஆள் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதற்கு இடையே ஊடகங்களில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பேச யாருக்கும் அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது.

இப்படி ஒரு இக்கட்டான சூழலில் சீமானை பெயர் குறிப்பிடாமல் விமர்சிக்க ஆரம்பித்தார் லாரன்ஸ். சீமானுக்கு எதிரான லாரன்ஸ் பேச்சுகள் மிகவும் வலுவாக இருந்தன. சமூக வலைதளங்களில் வைரல் ஆகின. ஏற்கனவே லாரன்ஸ்க்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. மேலும் அவர் ஏழைகளுக்கு உதவக் கூடியவர், சமூக சேவையில் நாட்டம் உள்ளவர் என்கிற ஒரு இமேஜூம் உண்டு. இதனால் ரஜினிக்கு ஆதரவாக லாரன்ஸ் பேசிய பேச்சுகள் கவனிக்கப்பட்டன.

ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு சீமான் குறித்து ரஜினி இருக்கும் போதே லாரன்ஸ் பேச ஆரம்பித்துவிட்டார். தர்பார் திரைப்பட விழா மேடையில் சீமானை மறைமுகமாக தாக்கிப் பேசிய லாரன்ஸ், பிறகு ரஜினி ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த அவரது பிறந்த நாள் விழாவில் சீமானை நேருக்கு நேராக கேள்வி கேட்டு பின்னி பெடல் எடுத்தார். லாரன்சின் இந்த பேச்சுகள் நாம் தமிழர் கட்சியினருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதனால் லாரன்சின் பின்னணியை அவர்கள் தோண்டி எடுத்தனர். லாரன்ஸ் தமிழன் இல்லை என்று பிரச்சாரம் செய்தனர். மேலும் ஸ்ரீரெட்டி லாரன்ஸ் பேசியதை விவகாரமாக்கினர். இதற்கு இடையே லாரன்சின் தாயார் குறித்தும் விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் லாரன்சுக்கு கொலை மிரட்டல்கள் வர ஆரம்பித்தன. சூட்டிங் ஸ்பாட்டில் சீமான் கட்சியினரால் தொல்லைகள் ஏற்படக்கூடும் என்று சந்தேகங்கள் எழுந்தன.

இப்படி ஒரு இக்கட்டான சூழலில் லாரன்ஸ் சிக்கியிருந்த நிலையில் ரஜினியிடம் இருந்து ஆறுதலான வார்த்தைகள் வரவில்லை என்று சொல்கிறார்கள். மாறாக லாரன்ஸை இனிமேல் அப்படி பேச வேண்டாம் என்று ரஜினி தரப்பிடம் இருந்து கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் கூறுகிறார்கள். அதோடு மட்டும் இல்லாமல், லாரன்ஸ் எதற்காக தேவை இல்லாமல் சீமானுக்கு எதிராக பேசி அவரை பெரிய ஆள் ஆக்குகிறார் என்று ரஜினி ரசிகர்களே கேள்வி கேட்க ஆரம்பித்தனர். இதனால் ஏற்பட்ட மன வேதனையில் தான் இனி தான் பேசுவதற்கும் ரஜினிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியதுடன் இனி ரஜினிக்கு ஆதரவாக எதுவும் பேசுவதல்லை என்கிற முடிவை லாரன்ஸ் எடுத்தாராம்.

click me!