
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், மற்றும் அக்ஷய் குமார் தற்போது நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது, இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டுமே உள்ளதாக கடந்த வாரம் ட்விட்டர் மூலம் தெரிவித்தார் ஷங்கர்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக "கபாலி" இயக்குனர் ரஞ்சித் படத்தில் இரண்டாவது முறையாக நடிக்க உள்ளார். இந்த படத்தை, ரஜினியின் மருமகன் தனுஷ் தயாரிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள இயக்குனர் ரஞ்சித், இது முற்றிலும் பொய்யான செய்தி என்று பதிலளித்துள்ளார். மேலும் இந்த படத்தின் நாயகி யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் இந்த படத்தில் படப்பிடிப்பு, தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்கும் என்று கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.