திருமணம் ஆன  ஒரே வருடத்தில் அஜித் நண்பருக்கு நிகழ்ந்த சோகம்...

Asianet News Tamil  
Published : Mar 18, 2017, 05:18 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
திருமணம் ஆன  ஒரே வருடத்தில் அஜித் நண்பருக்கு நிகழ்ந்த சோகம்...

சுருக்கம்

ajith friend car racer ashwin death

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருக்கும் நடிகர்  அஜித் சினிமா மட்டுமின்றி கார் ரேஸிலும்  ஆர்வம்  உள்ளவர். ஒரு காலகட்டத்தில் கார் ரேஸ் மட்டும்  தன் வாழ்க்கை என இருந்துள்ளார்.

இந்நிலையில் அவர் கார் ரேஸில் இருந்த போது அவரின் நெருங்கிய நண்பராக இருந்தவர் அஸ்வின் சுந்தர்.

அவர் நேற்று  தன் மனைவியுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டிற்க்கு BMW z 4 ரக காரில் வந்தபோது   அவரது கார் கண்ட்ரோல் மீறி மரத்தில் மிக வேகமாக மோதி தீ பற்றி எரிய தொடங்கியது.

கார் உள்ளே இருந்த அஸ்வின் மற்றும்  அவருடைய மனைவி நிவேதிதா  இருவருமே நெருப்பில்  கருகி உயிர் இழந்தனர். அவர்களை காப்பாற்ற அருகில் இருந்தவர்கள் சென்றபோது, கார் வெடித்து சிதறியதால் முடியாமல் போனது.

மேலும் இவருக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் தான் ஆகிறது, இன்று இலங்கை செல்வதாக அவர்கள் திட்டம் வைத்திருந்ததாக அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

40 வயதில் இரண்டாவது கர்ப்பத்தை அறிவித்த முன்னணி நடிகை – ரசிகர்கள் வாழ்த்து மழை!
விஜய்-சங்கீதா விவாகரத்து விவகாரம்: ரூ.250 கோடி கேட்ட சங்கீதாவிற்கு ரூ.35 கோடி செட்டில்மென்ட்டா? வெளியான முக்கிய தகவல்!