
ஷங்கர், கமல்,காஜல் அகர்வால் கூட்டணியின் ‘இந்தியன் 2’ படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர். ரகுமான் மறுத்துவிட்டதாகவும், அவருக்குப் பதிலாக மரணமாஸ் மன்னன் அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரபூர்வமான தகவல்கள் வந்துள்ளன.
1993ல் ‘ஜெண்டில்மேன்’ படத்தின் மூலம் இணைந்த ஸ்ட்ராங்கான கூட்டணி ஷங்கர்-ஏ.ஆர். ரகுமானுடையது. இடையில் சிறு மனக்கசப்பால், 2005ல் ‘அந்நியன்’ படத்துக்கு மட்டுமே ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். பின்னர் மீண்டும் கூட்டணி ஒட்டிக்கொள்ள தொடர்ந்து ரகுமான் இசையிலேயே டிராவல் பண்ணிவந்தார் ஷங்கர்.
இவ்வளவு காலமும் தனக்கு சற்று முக்கியத்துவம் தந்து நடந்துகொண்ட ரகுமான் ’2.0’ பாடல்களில், குறிப்பாக பின்னணி இசையின்போது தன்னை சற்றும் பொருட்படுத்தவில்லை என்றும் ஷங்கர் அதிருப்தி அடைந்ததால், தற்போது இந்த 25 ஆண்டுகால கூட்டணி நிரந்தரமாக முடிவுக்கு வந்துவிட்டதாகவும் இனி ஷங்கர் எப்போதும் ரகுமானிடம் போகமாட்டார் என்றும் தகவல்கள் நடமாடுகின்றன.
ரஜினி,கமல், ஷங்கர் படம் என அனிருத் காட்டில் அடைமழை பெய்வதால் அவரை அறிமுகப்படுத்திய தனுஷ் உள்ளிட்ட பலரும் தம்பி மீது செம காண்டில் உள்ளார்களாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.