இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு ஓடும் தியேட்டருக்குள் புகுந்த பெண்கள்… ரசிகர்களை ஓட ..ஓட .. விரட்டி அடித்து ரகளை !!

Published : Dec 12, 2018, 08:18 AM IST
இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு ஓடும் தியேட்டருக்குள் புகுந்த  பெண்கள்… ரசிகர்களை ஓட ..ஓட .. விரட்டி அடித்து ரகளை !!

சுருக்கம்

நடிகர் விமல் நடித்த இவனுக்கு எங்கோ மச்சம் இருக்கு படத்தில் ஆபாச காட்சிகள் இடம் பெற்றுள்ளதையடுத்து  அந்தப் படத்தை தடை செய்யக் கோரி மதுரையில் பெண்கள் போராட்டம் நடத்தினர். அப்போது தியேட்டருக்குள் புகுந்த அவர்கள் ரசிகர்களை அங்கிருந்து வெளியேற்றனர்  

கடந்த சில ஆண்டுகளில் ஹரஹர மகாதேவகி மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற தமிழ் திரைப்பங்கள் ஆபாசமா இருந்தது. ஆனால் இந்த இரண்டு படங்களும் பெரு வெற்றி பெற்றன. இந்தப் படங்களில்  பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் வகையில் காட்சிகளும், வசனங்களும் இடம் பெறும் வகையில் உள்ளன. இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண் கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் நடிகர் விமல் நடித்த ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ என்ற திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்த படத்தில் ஆபாச காட்சிகளும், பெண்களை கேலி செய்யும் வகையில் வசனங்களும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ஆபாச போஸ் டர்கள் நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள் ளன.

இந்தத் திரைப்படம் மதுரையில் காளவாசல் பகுதியில் உள்ள சண்முகா சினி காம்ப்ளக்சில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. நேற்று  காலை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள்  அங்கு திரண்டனர். அவர்கள் தியேட்டருக்குள் சென்று அங்கிருந்த போஸ் டர்களை கிழித்தனர்.

பின்னர் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி தியேட்டர் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது தியேட்டருக்குள் படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களை அந்த பெண்கள் சந்தித்து இது போன்ற ஆபாச படங்களை தயவு செய்து பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொண்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு காலை நேர காட்சி ரத்து செய்யப் பட்டது. படம் பார்த்துக் கொண்டிருந்த ஆண்கள் அவசர, அவசரமாக அங்கிருந்து வெளியேறினர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஒருத்தர விடல; வீடு புகுந்து எல்லோரையும் தூக்கிய போலீஸ்: பாக்கியத்தின் ரிவெஞ்ச் ஸ்டார்ட்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அதிரடி புரோமோ!
ரசிகர்களின் மனதை திரும்பவும் கொள்ளை கொண்ட அந்த ஒரு சீன் எது தெரியுமா? கார்த்திகை தீபம் சீரியல்!