இனி அவ்வளவுதான்… பாஜக செல்வாக்கை இழந்து விட்டது !! கொளுத்திப் போட்ட ரஜினிகாந்த் !!

Published : Dec 12, 2018, 06:31 AM IST
இனி அவ்வளவுதான்… பாஜக செல்வாக்கை இழந்து விட்டது !! கொளுத்திப் போட்ட ரஜினிகாந்த் !!

சுருக்கம்

பாஜக செல்வாக்கு இழந்து விட்டதையே  5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுவதாக  நடிகர் ரஜினிகாந்த் கருத்துத் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பாஜக வை எதிர்த்து எதிர்கட்சிகள் கூட்டம் நடத்தியது குறித்து கரத்து தெரிவித்தார். அப்போது ஒரு கட்சியை 10 பேர் எதிர்க்கிறார்கள் என்றால் அவர்களில் யார் பலசாலி ? என்பது உங்களுக்கே தெரியும் என பாஜகவுக்கு ஆதரவாக பேசினார்.

இந்நிலையில்தான் 5 மாநில தேர்தல் முடிவுகளில் பாஜக கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இதையடுத்து வெளியூர் செல்வதற்காக மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது   5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு  பதில் அளித்த ரஜினிகாந்த் , 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதை காட்டுவதாக தெரிவித்தார். இந்த முடிவுகள் பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஒருத்தர விடல; வீடு புகுந்து எல்லோரையும் தூக்கிய போலீஸ்: பாக்கியத்தின் ரிவெஞ்ச் ஸ்டார்ட்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அதிரடி புரோமோ!
ரசிகர்களின் மனதை திரும்பவும் கொள்ளை கொண்ட அந்த ஒரு சீன் எது தெரியுமா? கார்த்திகை தீபம் சீரியல்!