
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த 2014 ஆம் ஆண்டு சித்தார்த், லட்சுமிமேனன், பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி, அம்பிகா, உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். முழுக்க முழுக்க, மதுரையை மையமாக வைத்து... இதுவரை எடுக்கப்படாத புதிய கான்செப்டில் எடுக்கப்பட்டிருந்த இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.
மேலும் இந்த படத்தில் நடித்த நடிகர் பாபி சிம்ஹாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பீட்சா, போன்ற படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், ஜிகர்தண்டாரிலீசுக்கு பின்னர் இவருடைய படைப்புகளுக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உருவாக்கியது.
பல பிரபலங்கள் கலந்து கொண்ட 'யாரடி நீ மோகினி' சீரியல் நடிகை நக்ஷத்ராவின் வளைகாப்பு! வைரல் போட்டோஸ்..
சமீப காலமாக வெற்றி படங்களின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வரும் நிலையில், ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பார்களா? என கார்த்தி சுப்புராஜிடம் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், ஜிகர்தண்டா 2, உருவாக உள்ளதாக, அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கடந்த ஆண்டு ஜிகர்தண்டா படத்தின் டீசர் ஒன்றும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், தற்போது படக்குழு ரிலீஸ் செய்தியை அறிவித்துள்ளது. அதன்படி ' ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என அறிவித்துள்ளனர். நவம்பர் மாதம் இப்படத்தின் ரிலீஸ் ஆகும் என்று தெரிவித்திருந்தால் ரிலீஸ் தேதியை இன்னும் பட குழு வெளியிடவில்லை. ஏற்கனவே தீபாவளிக்கு, தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகா உள்ளது குறிப்பிடத்தக்கது.
'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகை அதிர்ச்சி மரணம்! சோகத்தில் மூழ்கிய சின்னத்திரை பிரபலங்கள்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.