கொரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலை என்ன?... ராகவா லாரன்ஸ் அறிக்கை வெளியீடு...!

By Kanimozhi PannerselvamFirst Published May 29, 2020, 6:08 PM IST
Highlights

 நான் செய்த சேவைகள் அனைத்தும் எனது குழந்தைகளை காப்பாற்றும் என நம்புகிறேன்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். குறிப்பாக இந்த கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இதுவரை எந்த முன்னணி நடிகரும் கொடுக்க முன் வராத பெரிய தொகையான 3 கோடி ரூபாயை நிதியாக அறிவித்தார். அதோடு நின்றுவிடாமல், நலிந்த  சினிமா கலைஞர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் நலிந்த தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு லட்சங்களை வாரி வழங்கினார். 

இதையும் படிங்க: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் படுமோசமான வீக்னஸ்... வெளிச்சத்திற்கு வந்த விவகாரம்...!

அதே போல் ஊரடங்கால் பாதிக்கப்பட்டு, வேலை இல்லாமல் கஷ்டப்படும் அடித்தட்டு மக்களுக்கு தன்னுடைய நண்பர்கள் மற்றும் குழுவினருடன் சேர்ந்து, தினமும் பலருக்கு உணவு வழங்கி வருகிறார். அப்படி தேடி தேடி உதவிகளை வாரி வழங்கிய ராகவா லாரன்ஸுக்கு இப்படி ஒரு சோதனையா? என அனைவரும் கலங்கும் அளவிற்கு வந்து சேர்ந்தது அந்த செய்தி. நடிகர் ராகவா லாரன்ஸ் அசோக் நகரில் நடத்தி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லத்தில் கொரோனா தொற்று பரவியது உறுதி செய்யப்பட்டது. 

அந்த இல்லத்தில் தங்கியிருந்த 10 மாணவிகள், 5 மாணவர்கள், 5 பணியாளர்கள் உட்பட 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அங்கு பணியாற்றி வந்த சமையல் வேலை செய்யும் பெண்கள் மூலமாக கொரோனா பரவியதாக கூறப்பட்டது. 

I Hope the service I do will save my kids.
My thanks to Thiru.S.P Velumani, honourable minister of local administration pic.twitter.com/fRXU7uw5kb

— Raghava Lawrence (@offl_Lawrence)

இதையும் படிங்க: 

இதுகுறித்து ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். நான் செய்யும் சேவை என்னுடைய குழந்தைகளை காப்பாற்றும். நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம். நான் ஆதரவற்ற குழந்தைகளுக்காக இல்லம் ஒன்றை நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே. ஒரு வாரத்திற்கு சில குழந்தைகளுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 18 குழந்தைகள் மற்றும் 3 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் இரண்டு மாற்றுத்திறனாளி பணியாளர்களும் அடங்குவர். இது எனக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது. மருத்துவர்களிடம் பேசிய போது குழந்தைகள் வேகமாக உடல் நலம் தேறிவருவதாக கூறினர். படிப்படியாக காய்ச்சல் குறைந்து இயல்பான நிலைக்கு திரும்பியுள்ளனர். மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு நெகட்டீவ் ரிசல்ட் கிடைத்துவிட்டால், குழந்தைகள் அனைவரும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள். 

இதையும் படிங்க: 

இந்த சூழ்நிலையில் உதவிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்களுக்கும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் பிஏ ரவி சாருக்கு மற்றும் மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ் அவர்களுக்கும் நன்றி. நான் செய்த சேவைகள் அனைத்தும் எனது குழந்தைகளை காப்பாற்றும் என நம்புகிறேன். குழந்தைகள் விரைவில் குணமடைய வேண்டுமென நீங்களும் பிரார்த்தனை செய்யுங்கள். சேவையே கடவுள் என்று குறிப்பிட்டுள்ளார். 
 

click me!