ரசிகரால் ஏற்பட்ட வலி... வேதனை...! அதிரடி முடிவு எடுத்த ராகவா லாரன்ஸ்..!

 
Published : Feb 04, 2018, 04:14 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
ரசிகரால் ஏற்பட்ட வலி... வேதனை...! அதிரடி முடிவு எடுத்த ராகவா லாரன்ஸ்..!

சுருக்கம்

ragava lawrence new announcement for fans

நடிகர் ராகவா லாரன்ஸ், திரையுலக பிரபலம் என்பதையும் தாண்டி ரசிகர்களுக்கு சிறந்த மனிதாக தெரிபவர். ஜல்லிக்கட்டு போராட்டம் முதல் சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு தன்னால் முடிந்த வரை ரசிகர்களுடனும், பொதுமக்களுடனும் சாதாரண சாமானியனாக நின்று போராடி வருகிறார்.

ராகவா லாரன்ஸ் முடிவு:

சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாள் அன்று...கடலூரை சேர்ந்து தீவிர ரசிகர் சேகர் என்பவர் ராகவா லாரன்சை சந்தித்து வாழ்த்து மற்றும் புகைப்படம் எடுத்துக்கொள்ள இரு சக்கர வாகனம் மூலம் சென்னைக்கு வந்தார்.

அனால் எதிர்பாராத விதமாக அவர் விபத்தில் மரணமடைந்தார். இது போன்று நடைபெறுவதை தவிர்க்க நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு புது முடிவு எடுத்துள்ளார்.

ராகவா லாரன்ஸ் கூறியுள்ளது:

இது குறித்து ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள தகவலில்.... என்னை நேரில் சந்தித்துப் புகைப்படம் எடுக்க எனது ரசிகர்களில் ஒருவரான கடலூரை சேர்ந்த R.சேகர் சென்னை வரும் போது விபத்தில் இறந்து போனார்.

அவரது குடும்பத்தார்க்கு ஆறுதல் கூறியதுடன் அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்டேன். அவரது இழப்பு எனக்கு மிகுந்த வலியையும் வேதனையையும் ஏற்படுத்தி விட்டது. அதனால் நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன்.

இனி எந்த ஒரு ரசிகரும் என்னை பார்க்க சென்னைக்கு வர வேண்டாம்....  வரும் வழியில் அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க விரும்புகிறேன்.. நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரசிகர்கள் இருக்கும் இடங்களுக்கே நேரில் சென்று சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது என்று முடிவெடுத்திருக்கிறேன்.

சந்திக்கும் இடம் நேரம் தேதி ஆகிய தகவல்கள் அவ்வப்போது அறிவிக்கப்படும். அதன் முதல் கட்டமாக வரும் 7ம் தேதி புதன் கிழமை சேலத்தில் ரசிகர்களை நேரில் சந்தித்து புகைபடம் எடுத்துக் கொள்ள உள்ளேன். இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிறிஸ்தவர், இஸ்லாமியர் கொடுத்த பணத்தில் தாலி வாங்கினேன்: நடிகர் ஸ்ரீனிவாசன் உருக்கம்!
லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....