சர்ச்சை பெயரில் வெளியாகிறது.... ஷகிலாவின் புதிய படம்...!

 
Published : Feb 04, 2018, 01:01 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
சர்ச்சை பெயரில் வெளியாகிறது.... ஷகிலாவின் புதிய படம்...!

சுருக்கம்

shakeela acting new movie release

நடிகை ஷகிலா:

நடிகை ஷகிலாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார். இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான பல படங்கள் வசூலில் சாதனைப் படைத்தவை. ஷகிலாவின் திரைப்படம் வெளியாகிறது என்றால் முன்னணி கதாநாயகர்கள் கூட தங்களுடைய திரைப்படத்தை வெளியிட தயங்குவார்களாம். காரணம் ஷகிலா நடிக்கும் படத்தில் அவர் ஒரு சீன்னில் வந்தால் கூட அதைப்பார்க்க தனி ரசிகர் கூட்டமே இருந்தது.

பிரச்சனை:

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இவர் கமிட் ஆன திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கும் இவருக்கும் எழுந்த பிரச்னை இவருடைய திரையுலக வாழ்க்கையில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

ஒரு நிலையில் பொறுமை இழந்த ஷகிலா இனி மலையாளத்தில் நடிக்க போவதில்லை என முடிவு செய்து 35 படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை தயாரிப்பாளர்களிடமே திருப்பி கொடுத்தார்.

வாழ்கை வரலாறு:

சமீபத்தில் தன்னுடைய வாழ்கை குறித்து புத்தகம் எழுதி இருந்தார். மேலும் தனியார் தொலைகாட்சியில் டாக்டர் நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சர்ச்சை பெயரில் படம்:

கடந்த 10 ஆண்டுகளாக பெரிதாக பட வாய்புகள் இல்லாமல் தவித்து வந்த ஷகிலா, தற்போது மீண்டும் தெலுங்கில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'ஷீலாவதி வாட் தி F**K என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த பெயர் அனைவரிடத்திலும் சிறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை உறுதி படுத்தும் வகையில் ஷகிலா இந்த படத்தின் ஃபஸ்ட் லுக்கை அண்மையில் வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தை தெலுங்கு  இயக்குனர் 'சாய் ராம் தராசி' என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தை ஏப்ரம் மாதம் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரசிகர்களின் மனதை திரும்பவும் கொள்ளை கொண்ட அந்த ஒரு சீன் எது தெரியுமா? கார்த்திகை தீபம் சீரியல்!
கார் விபத்து: நடுரோட்டில் பஞ்சாயத்தை முடித்து வைத்த சிவகார்த்திகேயன்! ரியல் லைஃப் 'அமரன்' என பாராட்டும் ரசிகர்கள்!