
நடிகர் கமல் தனது அரசியல் ஆசையை ட்விட்டர் மூலம் அவ்வப்போது தெரிவித்து வந்தார்.
பிக்பாஸ் கமல்
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக களமிறங்கி அரசியல் கருத்துக்களை தெரிவித்து வந்தார். மேலும் ட்விட்டரில் அவர் பதிவிடும், தமிழுக்கு தனி அகராதியை தேட வேண்டியிருக்கும்.அந்த அளவுக்கு அவரது தமிழ் புரியாத புதிராகவே உள்ளது.
நாளை நமதே
இந்நிலையில் 'நாளை நமதே' என்ற பெயரில் தனது அரசியல் சுற்றுப்பயணத்தை துவங்கவிருக்கிறார் கமல்.
அவர் தனது சுற்றுப்பயணத்தை வரும் 21ம் தேதி மறைந்த குடியரசு தலைவர் அப்துல்கலாம் இல்லத்திலிருந்து துவங்கவுள்ளார்.மேலும், கிராமங்களை மேம்படுத்தும் நோக்கில் கிராமம் ஒன்றை தத்தெடுத்து மேம்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.
குப்பைகளை அகற்றும் ரசிகர்கள்
கமல் அரசியல், கிராமம் தத்தெடுப்பது என்று ஒரு பக்கம் சென்றுக்கொண்டிருக்க, அவரது ரசிகர்களோ வியக்கக்கூடிய காரியத்தை செய்திருக்கிறார்கள். அவரது திருவள்ளூர் மாவட்ட ரசிகர்கள் பலர், சென்னை பெசன்ட் நகர் கடற்கரயில் தூய்மை செய்யும் பணிகளை துவக்கியுள்ளனர். மேலும் அவர்களுடன் அப்பகுதி மக்களும் சேர்ந்து குப்பைகளை அகற்றியுள்ளனர்.
விழிப்புணர்வு
இதோடு நிறுத்தி விடாமல் கடலில் குப்பைகள் கலப்பதால் கடல் வாழ் உயிரினங்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன.எனவே கடலில் குப்பைகள் சேராமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
கமல் ரசிகர்களின் இந்த செயலுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.