
விஜய் சேதுபதி தமிழில் சீதக்காதி, சங்குத்தேவன் காத்து வாக்குல இரண்டு காதல் போன்ற பல்வேறு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் ஒரு காட்சியில் மட்டும் வந்து செல்லும் நடிகராக நடித்துக்கொண்டிருந்தார் விஜய் சேதுபதி. தற்போது தனது அசராத நடிப்பாலும், உழைப்பாலும் ரசிகர்கள் மனதில் தனக்கென்று தனி இடம் பிடித்து விட்டார்.
சைரா
விஜய் சேதுபதி மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் நேற்று வெளியான படம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
அதோடு தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் சைரா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தியாகி நரசிம்மா ரெட்டி
ஆந்திராவை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரரான உய்யலாலா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாறுதான் 'சைரா' படத்தின் கதைக்கரு ஆகும். இப்படம் மூன்று மொழிகளில் மிக பிரம்மாண்டமாக உருவாகிறது.
விஜய் சேதுபதிக்கு வெயிட்டான கேரக்டர்
சுதந்திர போராட்ட தியாகி நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாறு கொண்ட இப்படத்தில் நரசிம்மா ரெட்டியாக சிரஞ்சீவி நடிக்கிறார். இந்த படத்தில் 200க்கு மேற்பட்ட பிரிட்டிஷ் நடிகர்கள் நடிக்கிறார்கள். சிரஞ்சிவியின் மகன் ராம்சரண் தேஜா இப்படத்தை தயாரிக்கிறார். தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராவதால், விஜய் சேதுபதிக்கு வெயிட்டான கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு பேசும் விஜய் சேதுபதி
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.
இதில் விஜய் சேதுபதி, 'ஈ'பட புகழ் சுதீப் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். விஜய் சேதுபதிக்கு தெலுங்கு அத்துப்படி. தனது படத்தின் தெலுங்கு ப்ரோமோஷன்களில் தெலுங்கில் சரளமாக பேசி அசத்துவாராம்.மேலும் தான் நடித்துள்ள ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்திலும் பல காட்சிகளில் தெலுங்கு பேசி அசத்தியுள்ளார்.
சொந்தமாக தெலுங்கு டப்பிங்
இதையடித்து தான் நடிக்கும் சைரா படத்திலும் தெலுங்கில் டப்பிங் பேச முடிவு எடுத்துள்ளாராம்.தமிழில் விஜய் சேதுபதியின் பேச்சுக்கும் அவர் நடிப்புக்கும் ரசிகர்கள் அதிகம் அந்த வகையில் தெலுங்கு ரசிகர்களை விஜய் சேதுபதி ஈர்ப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.