சமந்தா மைத்துனருக்கு திருமணம்... பெண் யார் தெரியுமா?

 
Published : Feb 03, 2018, 07:52 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
சமந்தா மைத்துனருக்கு திருமணம்... பெண் யார் தெரியுமா?

சுருக்கம்

santha brother in law marriage

நடிகர் நாகார்ஜுனா வீட்டில் சமீபத்தில் தான் கெட்டி மேளம் கொட்டியது. அது வேற யாருக்கும் இல்ல நம்ப பல்லாவரத்துப் பொண்ணு சமந்தாவுக்கும் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவிற்கும் தான். 

பிரமாண்டமாக நடந்த இந்த திருமணத்தில் பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டு இவர்களை வாழ்த்தினர். திருமணத்தைத் தொடர்ந்து நடிப்புக்கு கேப் விடுவார் சமந்தா என்று பலரும் எதிர்ப்பார்க்க, தற்போது மீண்டும் நடிப்புக்களத்தில் இறங்கி கலக்கி வருகிறார்.

சமந்தா நாகசைதன்யா திருமணத்தை தொடர்ந்து தற்போது நாகர்ஜுனாவின் இரண்டாவது மகன் அகிலுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. 

ஏற்கனவே அகிலுக்கும் பிரபல காஸ்டியூம் டிசைனர் ஸ்ரேயா பூபால் என்பவரும் காதலித்து வந்தார். இவர்களுக்கு மிக பிரமாண்டமாக நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் திடீர் என இவர்கள் இருவருக்குள்ளும் சில கருத்து வேறுப்பாடு ஏற்பட்டதால் இவர்களுடைய திருமணம் நின்றுவிட்டது.

இந்நிலையில் அகிலுக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்க்கும் படலம் நடைப்பெற்றது.  இவருக்கு தற்போது  பிரபல நடிகரான ராம் சரணின் மனைவியின் உறவினர் அனிந்தித் என்பவரை திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....
48 ஆண்டுகால சினிமா பயண நினைவுகளில் ஸ்ரீனிவாசன்; அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!