
கடந்த ஒரு வாரமாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் நடிகர் சங்க விவகாரம் குறித்த செய்திதான் பரபரப்பாக பேசப்படுகிறது.
நடிகர் சங்க பொதுக்குழுவில் , சரத்குமார்-ராதாரவி நீக்கம், அறக்கட்டளை குறித்த குற்றச்சாட்டுக்கள் என்பன குறித்து சமூக இணையதளங்களில் நடிகர்-நடிகைகள் இடையே சூடு பறக்க விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து சரத்குமாரின் மனைவியும் பிரபல நடிகையுமான ராதிகா நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு சிலகேள்விகளை முன்வைத்துள்ளார். ராதிகா கூறியதாவது:
அறக்கட்டளை விவகாரத்தில் சரத்குமார்-ராதாரவி மீது குற்றம் சாட்டும் கார்த்தி, முதலில் சிவாஜியிடம் இருந்து கேள்வியை தொடங்க வேண்டும். ஏனெனில் சிவாஜி கணேசன் அறக்கட்டளை உறுப்பினராக இருந்தபோது, வாரிசுகள்தான் சங்கப் பொறுப்புகளுக்கு உரிமை என்று மாற்றம் கொண்டுவந்தார்.
அதனை எஸ்.எஸ்.ஆர் தவறு என்று சுட்டிக்காட்ட பின்னர் சிவாஜி அதனை மாற்றி அமைத்தார். இந்த வரலாறு கார்த்திக்கு தெரியவில்லை என்றாலும் வரலாறு பேசும் என்பது அவரது அப்பா சிவகுமாருக்கு நன்கு தெரியும் என்று கூறியுள்ளார்.
இவர்கள் கேள்வி கேட்பதை சிவாஜியிடம் இருந்து தொடங்க வேண்டும். அப்படிச் செய்ய முடியுமா?”. என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் சங்கத்தின் கடனை இவர்கள் அடைத்ததாக கூறுவதை நம்ப முடியவில்லை. சரத்குமார் தலைவர் பொறுப்பிலிருந்து சரத் விலகும் போது 1 கோடியே 25 லட்சம் பணம் வைத்துவிட்டுதான் விலகினார்.
அப்படி இருக்கும்போது எதற்காக பணம் வாங்கிக் கடன் அடைக்க வேண்டும். கடனை அடைத்தோம் என்று விஷால் சொல்லுவதே தவறு.”
நட்சத்திர கிரிக்கெட் போட்டியின்போது மேக்கப் செலவிற்காக மட்டும் பல லட்சங்கள் கணக்கு எழுதியுள்ளனர். எந்த நடிகர் மேக்கப் போட்டு கொண்டு கிரிக்கெட் விளையாடினார் என்பதை விளக்க வேண்டும். நடிகர் சங்கத்தில் நானும் ஆயுட்கால உறுப்பினர் என்பதால் எனக்கு கேள்வி கேட்க உரிமை உண்டு.
நடிகர் சங்கக் கட்டிடம் கட்டிய பின்னர் அந்த கட்டிடத்தில் தான் தன்னுடைய திருமணம் என்று விஷால் கூறியுள்ளார்.
அவர் கட்டிடம் கட்டுவார் என்பதை கூட ஒத்துக்கொள்ளலாம். ஆனால் திருமணம் செய்துகொள்வார் என்பதை எல்லாம் நம்ப முடியாது...
இவ்வாறு ராதிகா முன்னணி பத்திரிகை ஒன்றின் பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.