ராதே ஷியாம் படத்தின் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்? வெளியான தகவல்!

By manimegalai aFirst Published Jun 6, 2021, 11:04 AM IST
Highlights

'பாகுபலி' நாயகன் பிரபாஸ் நடிப்பில் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள திரைப்படமான 'ராதே ஷியாமின்' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

'பாகுபலி' நாயகன் பிரபாஸ் நடிப்பில் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள திரைப்படமான 'ராதே ஷியாமின்' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்: மை ஓமன குட்டி... கேரளா சேலையில் ரசிகர்களை சுழட்டி போட்ட ஷிவானி..! சுற்றித்தான் போடணும்..!
 

பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிக்கும், 'ராதே ஷியாம்'  படத்தின் முதல் பார்வை முதல், போஸ்டர் வரை அனைத்துமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்து. இந்நிலையில், தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்கும் விதமாக கடந்த ஏப்ரல் மாதம் 'பல பண்டிகைகள், ஒரே காதல்' என்று தலைப்பிட்ட புதிய போஸ்டரை ராதே ஷியாம் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த போஸ்டர் படம் குறித்த எதிர்பார்ப்புகளுக்கு இன்னும் வலுக்க செய்தது என்றே கூறலாம்.  சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு காதல் ததும்பும் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிகவும் பிரமாண்டமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. பரபரப்பான காதல் கதையான ராதே ஷியாமில், பிரபாஸின் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ரோம் பின்னணியில் நாட்டின் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மொழிகளை கொண்டாடும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: மூன்று குழந்தை பிறந்த பிறகும் குறையாத அழகு..! ரம்பா பர்த்டே ஸ்பெஷல் புகைப்பட தொகுப்பு..!
 

இந்த படத்தை இவ்வாண்டு, ஜூலை 30 அன்று ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். இப்படத்தைக் காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்தனர். அகில இந்திய நட்சத்திரமாக உருவெடுத்துள்ள பிரபாசையும், அழகு மிளிரும் பூஜாவையும், அவர்களுக்கு இடையேயான காதலையும் திரையில் காண மிகப்பெரிய ஆவல் நிலவிய நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: பிறந்து சில தினங்களே ஆன குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ் பட ஹீரோயின்..! செம்ம கியூட் பேபி..!
 

தற்போது கொரோனா காலம் தலை தூக்கி உள்ளதாலும்... எப்போது திரையரங்குகள் திறக்கப்படும் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கும் நிலையில்... பட தேதியை மாற்ற படக்குழு யோசித்து வருவதாகவும் இதுகுறித்த அதிகார பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பன்மொழிப் படமான ராதே ஷியாமை ராதா கிருஷ்ண குமார் இயக்கியுள்ளார். யூவி கிரியேஷன்ஸ் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. வம்சி மற்றும் பிரமோத் இப்படத்தை பிரமாண்ட செலவில் தயாரித்துள்ளனர்.


 

click me!