விஜய் மாஸ்டர் படத்தை எடுக்க கூடாது என்று யாராவது தடுத்தால் முதல் ஆளாக நான் தான் நிற்பேன் என்று தடாலடி பதிலளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் தனக்கென தனி இடம் பிடித்த தளபதி விஜய்க்கு புது வருஷம் ஆரம்பிக்கும் போதே பிரச்சனையும் கூடவே வந்துடுச்சி. கடந்த வாரம் முழுவதும் சோசியல் மீடியாவில் ட்ரெண்டானது விஜய் வீட்டில் நடந்த ரெய்டு பஞ்சாயத்து தான். "மாஸ்டர்" பட ஷூட்டிங் அதுபாட்டுக்கு போய்கொண்டிருந்தது. நெய்வேலி ஷூட்டிங் ஸ்பார்டிற்குள் தடாலடியாக நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள், விஜய்யிடம் துருவி, துருவி விசாரணை நடத்தியதோடு மட்டுமில்லாமல், வாங்க போலாம் என வண்டியில் வளைத்துப் போட்டு, சென்னை கொண்டு வந்தனர்.
undefined
இதையும் படிங்க: சூப்பர் ஸ்டாராலும் முடியாதை சத்தமில்லாமல் செய்து முடித்த சூர்யா...நடுவானில் மாஸ் காட்டிய "சூரரைப் போற்று" டீம்...!
பனையூரில் உள்ள விஜய்யின் பண்ணை வீட்டில் வைத்து விடிய, விடிய விசாரணை நடத்திய ஐ.டி. அதிகாரிகள். அவருக்கு சொந்தமான வீடுகளில் சோதனையும் நடத்தினர். விஜய் வீட்டில் ஒரு ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை என்று கூறப்படும் நிலையில், சுமார் 1200 கோடி ரூபாய்க்கு கணக்கில் காட்டப்படாத சொத்துக்களை விஜய் வெளிநாடுகளில் வாங்கி வைத்துள்ளார் என்ற தகவலும் லைட்டாக கசிந்துள்ளது.
இதையும் படிங்க: செம்ம டைட் டிரஸில்... முன்னழகு தெரிய படுகவர்ச்சி போஸ்... பிக்பாஸ் அபிராமியின் கன்றாவி போட்டோஸ்...!
வருமான வரித்துறையின் ரணகளங்களில் இருந்து மீண்ட விஜய், அவரது ரெகுலர் வேலைகளைப் பார்க்கப் போய்விட்டார். ஆனால் அங்கும் அவரை நிம்மதியாக இருக்கவிடாமல் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாக்கப்பட்ட என்.எல்.சி. சுரங்கத்தில் எப்படி ஷூட்டிங் நடந்த அனுமதி கொடுக்கலாம் என்ற காரணத்தை தூக்கிக்கொண்டு வந்து போராட்டம் நடத்தினர். இதனால் அன்றைய ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகர் ராதாரவி, யூ-டியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, நடிகர் விஜய்யை ஜோசப் விஜய் என்று அழைப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆமா... விஜய் நிஜப்பெயர் ஜோசப் விஜய் தானே. அவரோட பாஸ்போர்ட்டில் கூட அப்படித்தானே இருக்கு. அப்புறம் ஜோசப் விஜய்யின்னு கூப்பிடுறதுல என்ன தப்பு என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க: வெள்ளை நிற ஜாக்கெட்... உச்சத்தில் நிற்கும் மார்கெட்... ரசிகர்களை கிறங்கடிக்கும் நயன்தாரா போட்டோஸ்....!
மாஸ்டர் பட ஷூட்டிங் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ராதாரவி, விஜய் மாஸ்டர் படத்தை எடுக்க கூடாது என்று யாராவது தடுத்தால் முதல் ஆளாக நான் தான் நிற்பேன் என்று தடாலடி பதிலளித்துள்ளார். தற்போது பாஜகவில் இருக்கும் ராதாரவியின் இந்த பதில் சொந்த கட்சிக்கே சவால் விடுவது போன்று உள்ளதாக கருத்துக்கள் எழுந்துள்ளது.