தர்பார் நஷ்டம்..! அடுத்த படத்தில் சம்பளம் குறைப்பு..! ரஜினியை குறி வைத்து வதந்தி..! பின்னணியில் யார்?

By Selva KathirFirst Published Feb 14, 2020, 9:57 AM IST
Highlights

தர்பார் திரைப்படம் வெளியாகி சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஒரு பத்து பேர் போயஸ்கார்டன் வந்து படம் நஷ்டம் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர்களை ரஜினி வீட்டு வாட்ச்மேன் உள்ளே விடாமல் விரட்டி அடித்தார். காரணம் தங்களை விநியோகஸ்தர்கள் என்று கூறிக் கொள்ளும் யாருமே உண்மையான விநியோகஸ்தர்கள் இல்லை என்பதுதான். தர்பார் படம் நஷ்டம் என்று கூறி ரஜினியின் இமேஜை டேமேஜ் செய்ய வேண்டும் மிகப்பெரிய அரசியல் கட்சியின் டாப் லெவலில் உள்ளவர்கள் செய்த சதி தான் இது என்பது தெரியவந்தது.

தர்பார் படத்தால் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் என்று முதலில் வேகமாக பரவிய வதந்தி பிறகு இதன் காரணமாக ரஜினிக்கு அடுத்த படத்தின் சம்பளம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது என்கிற நிலைக்கு சென்றுள்ளது. இதன்பின்னணியில் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் கட்சியின் அபிமானிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

தர்பார் திரைப்படம் வெளியாகி சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஒரு பத்து பேர் போயஸ்கார்டன் வந்து படம் நஷ்டம் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர்களை ரஜினி வீட்டு வாட்ச்மேன் உள்ளே விடாமல் விரட்டி அடித்தார். காரணம் தங்களை விநியோகஸ்தர்கள் என்று கூறிக் கொள்ளும் யாருமே உண்மையான விநியோகஸ்தர்கள் இல்லை என்பதுதான். தர்பார் படம் நஷ்டம் என்று கூறி ரஜினியின் இமேஜை டேமேஜ் செய்ய வேண்டும் மிகப்பெரிய அரசியல் கட்சியின் டாப் லெவலில் உள்ளவர்கள் செய்த சதி தான் இது என்பது தெரியவந்தது.

இதனை அடுத்தே ரஜினி தனது செல்வாக்கை பயன்படுத்தி இதன் பின்னணியில் இருப்பவர்களை விரட்டி விரட்டி வேட்டையாடினார். தர்பார் படம் நஷ்டம் என்று கூறி இயக்குனர் முருகதாஸ் வீட்டில் சென்று ரகளை செய்த விநியோகஸ்தர்கள் என்று கூறிக் கொண்டவர்கள் மீது கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பைனான்சியர் அன்புச் செழியன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை மற்றும் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு ஆகிய இரண்டு விஷயங்களுக்கு பிறகு தர்பார் படத்தால் நஷ்டம் என்று கூறிய அனைவரும் தலைமறைவாகினர். தங்களுக்கு 30 கோடி ரூபாய் வரை இழப்பு என்று கூறியவர்கள் திடீரென தலைமறைவானதே அவர்கள் கூறியதில் உண்மை இல்லை என்பது தெரியவந்தது.

இந்த பிரச்சனை ஓய்ந்த நிலையில் சமூக வலைதளங்களில் முக்கிய கட்சி ஒன்றுக்கு ஆதரவாக களம் ஆடி வரும் சில புரட்சியாளர்கள் அடுத்த வதந்தியை ஸ்டார்ட் செய்தனர். சமூக வலைதள வதந்தியை உண்மை என்று நம்பி பிரபலமான ஒரு ஆங்கில நாளிதழ் கூட அந்த வதந்தியை செய்தியாக வெளியிட்டது. அதாவது அந்த வதந்தி என்ன என்றால், தர்பார் படம் நஷ்டம் என்பதால் சன் பிக்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறன் ஐதராபாத்தில் படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்றதாகவும், அங்கு ரஜினியை சந்தித்து படத்திற்கான சம்பளத்தை குறைத்துக் கொள்ளும்படி கூறிவிட்டதாகவும் தகவல்கள் பரப்பப்பட்டன.

ரஜினி சம்பளத்தை குறைக்கவில்லை என்றால் படத்தை டிராப் செய்யும் முடிவில் கலாநிதி மாறன் இருந்ததாகவும் அந்த வதந்தியில் மேலும் ஒரு கொசுறு செய்தி போடப்பட்டிருந்தது. புதிய படத்திற்கு சம்பளமாக ரஜினிக்கு 120 கோடி ரூபாய் பேசியிருந்ததாகவும், தர்பார் நஷ்டத்திற்கு பிறகு அந்த சம்பளத்தை 60 கோடி ரூபாயாக கலாநிதி மாறன் குறைத்துவிட்டதாகவும், இதனை ரஜினியும் ஏற்றுக் கொண்டதாக அந்த வதந்தியை அந்த கட்சியின் ஆதரவாளர்கள் வேகமாக பரப்பினர். மேலும் குறிப்பிட்ட ஊடகங்களில் உள்ள அந்த கட்சியின் ஆதரவாளர்களும் இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டனர்.

இதன் உண்மை பின்னணி குறித்து விசாரித்த போது கடந்த ஒரு மாத காலமாக ஐதராபாத்தில் ரஜினியை சிறுத்தை சிவா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஆனால் இந்த கட்டுரையை எழுதும் வரை ஒரு முறை கூட கலாநிதி மாறன் அங்கு செல்லவில்லை. மேலும் படப்பிடிப்பிற்கு நேரில் செல்லும் பழக்கம் கலாநிதி மாறனுக்கு எப்போதும் இருந்தது இல்லை. இதுவரை ரஜினியை வைத்து இரண்டு படம், விஜயை வைத்து இரண்டு படங்கள், அஜித்தை வைத்து ஒரு படம் என சன் பிக்சர்ஸ் எடுத்துள்ளது.

ஆனால் ஒரு முறை கூட கலாநிதி மாறன் அந்த படங்களின் படப்பிடிப்பிற்கு சென்றது இல்லை. மேலும் சம்பள குறைப்பு என்பதும் வதந்தி என்கிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது புதிய படத்தை தர்பார் பட வியாபாரத்திற்கு முன்னதாகவே ரஜினியை வைத்து கன்பார்ம் செய்துவிட்டது. மேலும் பேட்ட படத்தின் வியாபாரத்தின் அடிப்படையில் தான் புதிய படத்திற்கு ரஜினிக்கு சம்பளம் பேசப்பட்டது. மேலும் அந்த படத்திற்கு கொடுத்த ஊதியத்தை விட 20 சதவீதம் அதிகம் ஊதியம் என்றே டீல் ஓகே செய்யப்பட்டுள்ளது. படத்திற்கு ரஜினிக்கு 120 கோடி ரூபாய் சம்பளம் என்பது எல்லாம் செவிவழிச் செய்தி.

 

இப்படியாக ரஜினி அரசியல் கட்சி துவங்கும் முன்பாக அவருடைய சினிமா இமேஜை டேமேஜ் செய்ய அந்த கட்சி காட்டும் அக்கறையை தனது தலைவரை புரமோட் செய்ய காட்டலாம் என்று கூறிச் சிரிக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

click me!