
நடிகர் சூர்யாவின் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் "சூரரைப் போற்று". இப்படத்தை துரோகம், இறுதிச் சுற்று போன்ற படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்கியுள்ளார். ஏர் டெக்கான் உரிமையாளரான ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தின் டீசர் கடந்த மாதம் ஜனவரி 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது. டீசர் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டது. இதனையடுத்து சூர்யா பாடிய 'மாறா சிங்கிள்' ட்ராக்கும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி படக்குழு சார்பில் காதலர் தின பரிசாக இன்று ''சூரரைப் போற்று'' படத்தின் இராண்டவது சிங்கிளான வெய்யோன் சில்லி வெளியிடப்படும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை எந்த ஒரு நடிகரும் முயற்சிக்காத புதுமையாக சென்னை விமான நிலையத்தில் ஆடியோ லாஞ்சை அறிவித்து அசத்தியது ''சூரரைப் போற்று'' படக்குழு.
அதன்படி இன்று சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற ஆடியோ லாஞ்சில் பங்கேற்பதற்காக கோர்ட் சூட்டில் சும்மா கெத்தாக வந்திருந்தார் சூர்யா. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் சுதா கொங்கரா, ஜி.வி. பிரகாஷ், மோகன் பாபு, பாடலாசிரியர் விவேக்,ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் நிர்வாக இயக்குனர் அஜய் சிங் உள்ளிட்டோர் இந்த இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றுள்ளனர்.
மேலும் அகரம் சார்பில் இதுவரை விமானத்திலேயே பறக்காத 100 மாணவ, மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் நடுவானில் பறந்தபடியே ''சூரரைப் போற்று'' படத்தின் ஆடியோ லாஞ்ச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள் முதல் விமானத்தின் உள்ளே ஒட்டப்பட்ட சூரரைப் போற்று போஸ்டர்கள் வரை அனைத்து புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் ட்ரெண்டானது.
இதனிடையே இன்று வெளியான ''வெய்யோன் சில்லி'' பாடல் சோசியல் மீடியாவில் பட்டையைக் கிளப்பி வருகிறது. இதை கொண்டாடும் விதமாக சூர்யா ரசிகர்கள் #VeyyonSilli என்ற ஹேஷ்டேக்கை உலக அளவிற்கு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
சூப்பர் ஸ்டாரின் பிரம்மாண்ட வெற்றி படங்களான 2.ஓ, கபாலி படங்களின் போஸ்டர்கள் மட்டுமே வானில் பறந்தன. இந்நிலையில் ஆடியோ லாஞ்சையே 100 குழந்தைகளுடன் நடுவானில் வைத்து அமர்களப்படுத்திவிட்டார் சூர்யா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.